நிறைய முறை காரிலும், பைக்கிலும் பஸ்சிலும் சென்று இருந்தாலும், முதன் முதலாக ரயிலில் செல்ல நேர்த்தது.
அப்படி என்ன ரயிலில் செல்லும் போது
இருந்துவிட போகிறது என்ற எண்ணத்திலே தான் ரயில் ஏறினோம்.
முதல் வகுப்பு பதிவு செய்யப்பட்டு
இருந்தது. முதல் வகுப்புக்கும் அடுத்துள்ள வகுப்புகளுக்கும் பெரிய வித்தியாசம்
இல்லை.
சரியாக 2.15 க்கு புறப்பட தொடங்கியது ரயில்…
கொஞ்சமாக அழகில் என்னை கவர தொடங்கினாள்
மலைகளின் ராணி…
மலைகளின் ராணி என்று சும்மாவா
சொன்னார்கள் வெள்ளையர்கள்.
அடுத்த 5 ஆவது நிமிடத்தில் அவளின் அழகில் மயங்கிய நான், மேட்டுபாளையம் வரும் வரை மீளவே முடியாத நிலைக்கு சென்று விட்டேன்.
மலைகளின் மொத்த அழகும், வனப்பும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும்,
உயர்ந்த மலை சிகரங்களும், நீண்ட தாழ்வான பள்ள தாக்குகளும் இலேசாக தூறல் போட தொடங்கிய வானமும்,
குகைகளும் பரவசத்தின் உச்சிக்கே கொண்டு
சென்றது.
(208 வளைவுகள், 16 குகைகள், 250 பாலங்கள்)
மிக மிக மெதுவாக செல்லும் ரயிலின் (13 கி.மீ., வேகம்) வெளியே தெரியும் ஒவ்வொரு
காட்சிகளும் கவிதை எழுத சொல்கிறது.
குளிரின் தாக்கம் தெரியா வண்ணம் வண்டி
நிறுத்தும் இடங்களில் தேநீர் மற்றும்
சூடான பஜ்ஜிகள்…
குழந்தைகளை மகிழ்விக்க குகைகள் மற்றும்
குரங்குகள்.
ஒரு விதத்தில் ஆங்கிலேயனுக்கு நன்றி
சொல்லித்தான் ஆக வேண்டும், இவை எல்லாம் அவர்கள் காலத்தில் செயல்
படுத்தபட்டவை…
குகைகளை குடைந்து பாதை போட்டதும், பாலங்கள் கட்டியதும், பெரிய பெரிய கற்கள் கொண்டு
சீராக்கியதும், சாதரணமாக முடிந்திருக்கும் காரியங்கள்
அல்ல…
எத்தனை எத்தனை மனித மற்றும் மிருக
உயிர்கள் பலி ஆக்கப்பட்டிருக்கும்? அது கண்ணில் நீர் வர வைக்கும் தனி கதை…
ரயில் மேட்டுபாளையம் தொட 3 மணி நேரம் எடுத்து கொண்டது…
அந்த 5 மணி நேரம் (7500 அடி)
முழுதாய்
நான் அனுபவித்து வாழ்ந்த
வாழ்நாள் முழுவதும் மறக்கவே இயலாத
நேரங்கள்….
நீங்கள் கண்டீப்பாக நேரம் கிடைக்கையில்
அங்கே ரயிலில் சென்று வாருங்கள்,
மிக சிறப்பான வாழ்நாள் அனுபவம் கிடைக்க
கூடும் என்னை போலவே….
No comments:
Post a Comment