திருவிழாவிற்க்காக ஊருக்கு நேற்று
சென்று இருந்தபோது மாறனை பார்த்தேன், எனது 8 வயதில் இருந்து மாறனை எனக்கு தெரியும், இப்போது அவருக்கு சுமாராக 70 வயது
இருக்கலாம், கல்லூரி பருவத்திலும் வேலை இல்லாமல்
கையில் காசு இல்லாமல் சுற்றிய, பருவத்திலிருந்து எனது அசிஸ்டன்ட்
அவர்தான்.
நேற்றும் நான் பார்த்தது என் பழைய
மாறனைத்தான், அதே பிரியம், அதே அன்பு.
காலம் அனைவரையும் எதாவது ஒரு தளத்தில்
முற்றிலும் மாற்றி விடுகிறது, நானும் அதற்கு விதி விலக்கல்ல...
காலத்தை பழிவாங்கும் மனிதர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள், எவ்வளவு மாற்றங்கள் பூமியில் வந்தாலும்
கொஞ்சம் கூட மாறாத எளிய மனிதர்கள், பூமியில் வசிக்கதான் செய்கிறார்கள்,
அவர்கள் கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவர்கள்,
என் மாறனும் அதில் ஒருவர், மாறனுக்கு நான் என்ன செய்து விட முடியும் எனது அன்பை தருவதை விட...
பொதுவாக எளிய மனிதர்களுக்கு துன்ப
சிந்தனைகள் அதிகம் இருப்பதில்லை அதனாலோ என்னவோ அவர்களுக்கு சாமியார்கள்
தேவைபடுவதில்லை.
No comments:
Post a Comment