Wednesday, January 13, 2016

“பாழாம் வெளி”. -பிரமிள்

க்ரிஷ் கெயலிற்கு பந்து வீசுதல்
நான் இந்த ஆட்டத்திலேயே இல்லை
சொல்லப்போனால் ஒரு பார்வையாளனாக கூட இல்லை
மைதானத்திற்குள் தரதரவென இழுத்துவரப்பட்டு
பந்துவீசுமாறு பணிக்கப்பட்டிருக்கிறேன்
எதிரே க்ரிஷ் கெயல் நின்றுகொண்டிருக்கிறார்
அணித்தலைவர் ஓடிவந்து
பந்து அந்தரத்திலேயே இடப்பக்கம் சுழன்று
மறுபடியும் வலப்பக்கம் சுழன்று
விழுமாறு வீசச்சொன்னார்
நான் அவரது முகத்தையே பார்த்தேன்
அவர் திரும்பி ஓடிவிட்டார்
எதிரே க்ரிஷ்கெய்ல் நின்றுகொண்டிருக்கிறார்
அவரின் சடாமுடி ருத்ரதாண்டவனை குறித்து நிற்கிறது
அடேய் சுடலையப்பா….
இந்த பந்தை வானத்திற்கு அடி
திரும்பி வரவே வராத படிக்கு வானத்திற்கு அடி.


பாழாம் வெளி”. -பிரமிள்

No comments:

Post a Comment