Thursday, January 14, 2016

என் தோழி இந்துவின் கவிதை

வெள்ளையனின் அடிமை வாழ்க்கையில் மீண்டு,  மீண்டும் அந்நிய சக்தியின் கைகளுக்குள்தான் சிக்கி கிடக்கிறோம் என்பதை அழகாக சொல்லும் கவிதை, கவிதையில் திரும்ப உரிமை பெற்று நமது அடுத்த சந்ததிக்கு விட்டு செல்வோம் என்று நியாயமான ஆசை கொள்ளும் பாரதியின் ரசிகையின் கனவு நனவாகட்டும் 

புரட்சி


ஒருமித்த கருத்துடைய அனைவரையும் 
ஒரு ஒருவராய் மெல்ல சேர்த்தான் 
தாகம் தணிக்க காகம் சேர்த்த கல்லாய் !! 
வளைந்த முதுகுகளை ஒன்றாய் 
சேர்த்து கட்டி திடமாக்கினான் 
ஒன்றாய் சேர்ந்த சுள்ளிகளின் வலுவாய் !!
நம்பிக்கை எனும் விதையை தன்னை 
நிலமாக்கி ஆழ புதைத்து வைத்தான் 
தன் ரத்தத்தை நீராய் பாய்ச்சினான் 
பொறுமையை விதைக்கு பதியமக்கினான் 
"புரட்சி" எனும் நாற்றை அறுவடை செய்தான் 
அடிமை சாசனம் எழுதிய விருட்சத்தின் 
வேரில் வெந்நீரை ஊற்றி வேரோடு பெயர்த்து 
தீர்க்கமாய் வேறிடம் வீசி எறிந்தான் 
- என் பாட்டன் 
காலம் சென்றது பாட்டனின் காலமும் 
தன் நாற்றை பேரன் கை சேர்த்தான் 
பெற்றிருந்தால் பேறு வலி 
தெரிந்திருக்குமோ என்னவோ 
கை சேர பெற்றதனால் என்னவோ 
காரியத்தின் கருத்து அறியவில்லை 

வேரோடு பெயர்க்க பட்டவன் 
வீசி எறியபட்டவன் மீண்டும் 
வந்தான் மீண்டு வந்தான் 
அடிமை சாசனம் எழுத - 
பாட்டன் இல்லை என்பதை அறிந்து,
இல்லாவிட்டாலும் அவன் ரத்தத்தின் நாளம்
இருக்கும் என நினைத்தானோ என்னவோ 
அடிமை சாசனம் இட்டால் 
அடித்து விடுவான் என 
பணியாளர் சாசனம் இட்டு 
பணிவாய் பணிய வைத்தான்
உணவை மறுத்தால் உதைத்து 
விடுவான் என அழகாய் 
உண்ணும் நேரத்தில் உறங்க வைத்து 
உறங்கும் நேரத்தில் உண்ண வைத்து
ஊரறியாமல் உரிமையை பறித்தான்
பாட்டன் அறுவடை செய்ததை 
பேரன் கைகொண்டே புதைத்தான் 
புத்திசாலி தான் அவன் - ஆனால் 
ஒன்றை மறந்து விட்டான் - புதைத்தது 
மனித உடலாயின் மக்கி போயிருக்கலாம் 
விதை ஆயின் மீண்டிருக்கும் இந்நேரம் 
கதிர் ஆயிற்றே காலம் கொள்கிறது !!!
கதிர் முற்றும், விதை ஆகும் 
பூமி மீளும் , நுனி நீளும் 
மீண்டும் விருட்சமாகும் - அந்த 
விருட்சத்தின் கிளையை பற்றி 
என் பேரன் சொல்லுவான் 
பகட்டு வாழ்க்கைக்காய் என் 
நாட்டின் வம்சத்தை அழித்து,- அவன் 
நாட்டின் கலப்பினத்தை புகுத்தி-என் 
முப்பாட்டனின் உழைப்பை தின்ற 
நம் நாட்டின் நாகரீக அடிமை நீ என்று

No comments:

Post a Comment