எனக்கு பிடித்ததை அவளும்
அவளுக்கு பிடித்ததை
நானும் பேசிக்கொண்டிருந்தோம்,
பிடிக்காதவைகளையும் பேசி
இருந்திருக்கலாம்
பிரிய நேர்ந்திருக்காது...
அவள் என் காதலியாகி
மனைவியாகி விட்ட பிறகு,
"உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்"
என கடவுளை பார்த்துக்கூட
கேட்டு விடக்கூடும் நான்
-------------------------
உன்னை விட அழகானது உன் கோபம்,
என்னை விட பரிதாபமானது என் காதல்
#தபு
-------------------------
"சுவாதிநட்சத்திரத்தில் பிறந்தவள் நான்" என்றாள்,
நிலவில் பிறந்தவள் என்று
நினைத்திருந்தேன்,
அதைதாண்டி
நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறாள்
போலும்
-------------------------
நீ பேசு இல்லை
உன் அழகு பேசட்டும்
-இருவரும் பேசினால்
நான் எதை கேட்பது
-------------------------
No comments:
Post a Comment