ரசித்த சில ட்விட்கள்
டுபாக்கூர் ஏஜெண்டுகிட்ட சிக்கி
துபாய்க்குப் போகமுடியாத பார்த்திபன், வெற்றிகரமா
துபாய்க்குப் போய்ட்டு வந்த வடிவேலுவை ஓட்டுறதுதான் Irony! :)
@kiramaththan
ஓட்டே போடாம அரசியல் பத்தி பேசுறது.
படமே பாக்காம பட விமர்சனம் செய்றது.
வயலே பாக்காம விவசாயம் பத்தி பேசுறது
யாருங்க நீங்க - டிவிட்டர் பிரபலம்
@DinuVj
ஈகோவைத்தான் நிறைய பேரு கெத்துன்னு
நினச்சுக்கிட்டிருக்காங்க
@SelvaaRocky
தி.மு.க என்பது நமக்கு தெரியாதிருக்க
பினாமி வைத்து தெளிவாய் திருடுவது, அதிமுக என்பது நமக்குத் தெரிந்தால்
என்ன என்று திமிராய் திருடுவது.
@moon_inthewell
குழந்தைகளின் கோபமும் சண்டையும் அடுத்த
விளையாட்டு ஆரம்பிக்கும் வரை தான்!ஆனால்
பெரியவர்களின் சண்டை தான்
அடுத்த தலைமுறைகள் வரை நீடிக்கிறது!!
@ponkulanthai
எல்லோருடைய வாழ்க்கை புத்தகத்திலும்
கிழித்து எறிந்து விட நினைக்கும் பக்கம் இருக்கத்தான் செய்கிறது...!!!
@shefnatwits
TR : என் புள்ள சட்டைல சின்ன கரை பட்டாலும்
உன்ன செதச்சிடுவேன்
பாண்டவர் அணி : அப்ப அவன் சட்டைய
கழட்டிட்டு அடிங்கடா
@MrElani
இனி ஒன்றுமில்லை என அழுது தீர்க்கும்
பொழுது
கடைசி நொடியில் பிறக்கும் துணிவுதான்
மீண்டும் வாழ்வை
வாழச் சொல்கிறது.!
@dhivya_iam
நாரதனால் எல்லா இடங்களிலும் இருக்க
முடியாது..
அதனால்தான் கடவுள் உறவினர்களை
படைத்துள்ளார்
@Shalinii_
நான் நல்லவன் என்பதற்கு சாட்சி ,
நான் செய்த எந்த தவறுக்கும் சாட்சி இல்லை
என்பதே !
@Kathirru
விருப்பமில்லாதவர்களை சுமக்காதீர்கள்,
உயிரற்ற உடல் போல் கனப்பார்கள்.
@tejomayan
இட்லி தோசை பொங்கல் உப்புமா கிச்சடி
எனும் பஞ்சபாண்டவர்களுக்கென படைக்கப்பட்ட திரெளபதி தேங்காய்சட்னி
@mpgiri
"மயிராப்போச்சு போ" என்ற
மனநிலைக்கு வந்தவுடன் பிரச்சனையை அணுகுவது சுலபமாயிருக்கிறது.
@svenkad
ஒரு மழலை செமயா அழுதுட்டே வந்து
வாசப்படி ஏறும்போது கவனமா அழுகை நிறுத்திட்டு கை ஊனி விழாம ஏறி திரும்ப அழுகைய
தொடருது :-)
@arattaigirl
ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின்
பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம்.
@nmravikumar
நிறைய நேரமும் குறைவாகப் பணமும்
செலவழித்து வளர்க்கப்படும் குழந்தைகள்
வீணாகப் போவதில்லை...
@mekalapugazh
இப்போதாவது புரியுமா. பணமோ, அழகோ, சாதியோ, மதமோ எதுவுமில்லை. வாழ்ந்த விதம் மட்டுமே ஒருவருக்கு பெருமை
சேர்க்கும்.
@r_vichu
No comments:
Post a Comment