நான் இதுவரை நேரில் ஜல்லிக்கட்டை
கண்டதுமில்லை, டிவியில் கூட அத்தனை ஆர்வமாக
பார்த்ததில்லை என்றாலும், எனக்கு சில கேள்விகள் PETA அமைப்பை பார்த்து கேட்க வேண்டி உள்ளது
@ கேரளா கோயில்களில் ஓணம் என்ற பெயரில்
யானைகள் கட்டி வைத்து துன்புறுத்துவதை பற்றி PETA என்ன செய்து இருக்கிறது
@ தமிழன் பாரம்பரியமும், கலாச்சாரமும் பற்றி என்ன தெரியும்?
@ கோழி, ஆடு, மாடு, பன்றி என கொலை செய்து விற்கபடுவதை ஏன் தடுக்கவில்லை? அதை உங்கள் அமைப்பில் KFC போன்ற வணிக
கடைகளில்கூட யாரும் சாப்பிடுவதில்லை என உறுதி அளிக்க முடியுமா?
@ குதிரைரேஸ் உங்கள் நிலைப்பாடு என்ன?
@ உங்களுக்கு நிதி எந்த நாடுகளிருந்து
வருகிறது, எவ்வளவு வருகிறது, அவை எதற்காக உங்களுக்கு தருகின்றன என்பது பற்றி, உங்கள் சரியான வங்கி ஆவணத்தை காண்பிக்க தயாரா?
@ இந்திய தேசத்தில் பிறந்து அந்நிய
நாடுகளின் நிறுவனங்களுக்கு துணை போகிறிர்கள் என்பது பற்றி உங்களுடைய பதில் என்ன?
உண்மை நிலை பற்றி திரு ஆதி வள்ளியப்பன் அவர்களின் கருத்து
ஜல்லிக்கட்டுத் தடைக்கு வேறு பின்னணி
உண்டா?
உலகமயமாக்கலுக்குப் பின்னர் இது போன்ற
உள்ளூர் கலாச்சார நிகழ்வுகளை ஏதாவது ஒரு வழியில் வலிந்து நிறுத்துவதற்கு உலக
நிறுவனங்கள் முயற்சிப்பதை உற்று நோக்க வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கத்திய
மாடுகளுடன் பெரும் பால் பண்ணைகளை அமைப்பதற்கு, உள்நாட்டு மாட்டினங்களைக் கொண்டாடும் ஜல்லிக்கட்டைப் போன்று ஆழ
வேரூன்றிய விழாக்கள் மிகப் பெரிய தடையாக உள்ளன. உள்ளூர் மாட்டினங்கள் மீதான
பிடிப்பை, தங்களுக்கு எதிரானதாகப் பன்னாட்டு வணிக
பால் நிறுவனங்கள் கருதுகின்றன.
வளரும் நாடுகளின் விவசாயத்தில் விதை
உற்பத்தி, விதை விற்பனையைத் தன்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோ
முயற்சிப்பதைப் போல, ஜெர்சி, ஃபிரீசியன், பிரவுண் ஸ்விஸ் போன்ற வெளிநாட்டு
மாட்டினங்களைப் புகுத்துவதற்குப் பல பன்னாட்டு நிறுவனங்கள் தீவிரமாக
முயற்சித்துவருகின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவை ஊடுருவுவதற்குப்
பண்பாட்டு நிகழ்வுகளை நிறுத்துவது, அது சார்ந்த வெறுப்பைப் பரவலாக்குவது
இவர்களுடைய ஒரு உத்தி.
மாட்டுக்கும் மனிதர்களுக்கும் பங்கம்
இல்லாமல் ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்பதில் இரு வேறு
கருத்தில்லை. அதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகளை வரையறுத்து முறையாகக்
கடைப்பிடிக்க வேண்டும். மாறாக, ஜல்லிக்கட்டையே ஒழிக்க வேண்டும் என்று
வலியுறுத்துவது முறையல்ல!
No comments:
Post a Comment