Wednesday, January 13, 2016

யார் போலீஸ்காரர்?


பைக்கை சர்வீஸ் விட்டிருந்ததால் பக்கத்துக்கு வீட்டு நண்பர் ஒருவரின் வண்டியை இரவல் வாங்கி பழங்கள் வாங்கி வர சென்றேன்,
சிறிய கடையை தேடி பிடித்து வாங்குவது எனது வழக்கங்களில் ஒன்று, அதே போல் ஒரு வண்டி கடையில் வாழைப்பழம் ஒரு சீப் வாங்கி விட்டு பணம் கொடுக்க போனால் வண்டியில் பழங்கள் வைத்து விற்றுக்கொண்டிருந்த அம்முதியவர் தலையை சொறிந்து கொண்டு "வேணாம் சார்" என்றார், "ஏன் வேண்டாம்?" என்றவரிடம் போலீஸ்காரரிடம் வாங்குவதில்லையாம்,

பின்னர் தான் கவனித்தேன், நான் வண்டி இரவல் கேட்டு வாங்கி வந்த அந்த நண்பர் ஒரு போலீஸ், அவ்வண்டியில் police என்ற sticker முன்புறமும் பின் புறமும் ஒட்டி இருந்ததை... நான் போலிசும் இல்லை, இது என் வண்டியுமில்லை என்று விளக்கி சொன்ன பின்னும் நம்பாமல் 10 ரூபாய் கொடுக்க சொன்னார், ஒரு பழமே 5க்கு கிடைக்கையில் ஒரு சீப் வெறும் 10 மட்டுமா என்று கேட்டு, அதற்கான விலையை கொடுத்தேன்...
போலீஸ் என்பதும் மற்றவர்களை போல ஒரு வேலை மட்டும் தானே? அதற்கு எதற்கு பயப்பட வேண்டும் என்பது எனது தீராத குழப்பம், எவ்வளவோ காவலர்கள் தனது பணியின் மூலம் தன்னை சிறப்பாக நிரூபித்தாலும், ஒரு சிலர் தனது பணியின் துணை கொண்டு எளிய மக்களை எவ்வளவு பாடு படுத்துகிறார்கள் என்பதும் வேட்கக்கேடல்லவா?
இவர் மட்டும் அல்ல, Eb, income tax, court, மட்டும் பலர், எதற்காக அரசு கொடுக்காத தனது சொந்த வாகனத்தில் இவர்கள் இதை எழுதி வைக்க வேண்டும்? இவை தான் யார் என்பதை ஏன் எல்லா இடத்திலும் நிரூபித்து கொண்டே இருக்க வேண்டும்?

தனது பணியில் எதையும் நிரூபிக்க முடியாதவர்கள் வாகனங்களில் எழுதி வைத்து நிரூபித்து கொள்கிறார்கள் என்று நண்பர் எழுதியது முழு உண்மையே

No comments:

Post a Comment