நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை,
நம் அருகில் இருப்பவரை விட கூகிள் சரியாக
புரிந்து கொள்கிறது
-------------------------------------------------
உலகமெங்கும் பயணித்தாலும், தேடி இன்பம் புசித்தாலும், முடிவுக்கு
வரும் திருப்தி இல்லாத வெறுமையான வாழ்க்கை இது,
இந்த நொடியே முழுமையாய் வாழ்ந்து
தீருங்கள் ...
-------------------------------------------------
நாம் எந்த நிலங்களை விட்டுவிட்டு
வந்தோமோ,
எந்த முகங்களை விட்டுவிட்டு வந்தோமோ,
அங்குதான் பண்டிகைகள்
குடியிருக்கின்றன...
-------------------------------------------------
ஆறுதல் சொல்லி அவமானப்படுத்தப்
படுமளவிற்க்கு
கேவலமானதல்ல தோல்விகள்...
-------------------------------------------------
விரிசல் விழும் பெரும்பாலான உறவுகளை,
நட்புகளை
மீட்டேடுக்கவே விடுவதில்லை காலம்
-------------------------------------------------
No comments:
Post a Comment