"தேர்தல்"
“தேர்தலெனும்
ஆர்ப்பாட்டமான
டெஸ்ட்டில்
அம்பயர்களாக
நின்ற
அப்பாவி
மக்களே-எப்போதும்
அவுட்
ஆகிறார்கள்..!”
-------------------------------------
“பரத்தமை”
“நாங்கள்
பொருட்பாலுக்காக
காமத்துப் பாலை
விற்கிறோம்
அதற்காக
அறத்துப்பால் ஏன்
அழுதுவடிகிறது..?
சுதந்திரம்
“இரவில்
வாங்கினோம்
விடியவே
இல்லை..என
புதுக்கவிதை
சொல்லி
புலம்பித்
திரிகிறார்கள்
பாரதம் முழுவதும்
ஊழல்மன்னர்கள்
பரவிக்கிடக்கையில்
பகலில்
வாங்கியிருந்தால் மட்டும்
விடிந்துவிடவா
போகிறது..?”..
சுதந்திரம்
“பட்டுவேட்டியைப்
பற்றிக்
கனாக் கண்டு
கொண்டிருந்தபோது
கட்டியிருந்த
கோவணமும்
களவாடப்பட்டது..!”
“களவாடப்பட்டது
கோவணம்
கனவிலென்னவோ
பட்டு வேட்டி..”
No comments:
Post a Comment