Tuesday, January 12, 2016

நகுலன் கவிதைகள்

எனக்கு யாருமில்லை
நான்
கூட...
-------------------------

 நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும்
முடியவில்லை
-------------------------

 நான் இறந்த பின்
யாரும் எனக்கு விழா எடுக்க வேண்டாம்,
என்னால் கலந்துகொள்ள முடியாது
-------------------------

 மனம் நினைவுகூரும்
அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது.
இது சிருஷ்டி ரகசியம்!
-------------------------

 மனதின்  எந்த கதவு  எப்போது  திறக்கும்,
என யாருக்கு தெரியும்?
-------------------------

 என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
-------------------------

 வேலைக்குத் தகுந்த வேஷம்
ஆளுக்கேற்ற அபிநயம்
இதுதான் வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு
-------------------------

 சிலர்
வந்ததும்
வந்து
சென்ற
பிறகும்
சூன்யமாகவே
மிஞ்சுகிறார்கள்.
-------------------------

 அலைகளைச் சொல்லிப் பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை.
-------------------------

 இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமற்
போகிறோம்


-------------------------

மீண்டும் ஓஷோ

பயம் எங்கு முடிகிறதோஅங்கு வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது... 
-------------------------

 அதிக பட்ச நெருக்கடிகளை அனுமதியுங்கள், அதுவே ஆழ்ந்த அமைதி என்றால் என்னவென்றும் சொல்லி தர கூடும்
-------------------------

 எதற்கும் பயன்படாத எதிர்காலம் பற்றிய கவலைகளை தூக்கி தூர வீசி விட்டு, இப்போது அழகான நிமிடங்களை உருவாக்கி வாழுங்கள்
-------------------------

 எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம் என்ற ஆச்சர்யத்தை மறைத்து வைத்திருக்கிறது வாழ்க்கை

-------------------------

கவிதைகள் 2

மரண கனவை காலால் உதைக்கிறேன்,
எமனின் "அய்யோ" என்று
அலறும் குரல் கேட்கிறது
-------------------------


 இந்தியாவின் கேப்பிடல்  டெல்லி என்கிறது
சிறுவர்களுக்கான வரலாற்று புத்தகம்
அது சுவிஸ் வங்கியில் பதுங்கி இருக்கிறது என
எப்படி சொல்ல?
-------------------------

 யாரையேனும் எப்போதும் நேசிப்பதில்தான்
உயிர்ப்போடு இருப்பதின்
இரகசியம் ஒளிந்திருக்கிறது
-------------------------

 வரும் தேர்தலிலும் போட்டியிட்டு
தோற்று போகும்
-ஜனநாயகம்
-------------------------

 வாழ்ந்த சுவடுகள் ஏதுமின்றி
ஒரே ஒரு நொடியில் கரைந்து போய் விடும்
ஒரு அழகான மரணம் வேண்டும்
ஆசை
-------------------------

 நிம்மதியான இரவு தூக்கத்தின் சாவியை,
இணையம் பறித்துக்கொண்டு விட்டது

 -------------------------

 எனக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு
இரண்டு காரணங்கள் உண்டு,
ஒன்று என் எதிரி,
இன்னொன்று நான்.
-------------------------

 அன்பும் கருணையும் பிறப்பில்
இயல்பாகவே இருந்ததுதான்...
காலபோக்கில் நாம்தான்
தொலைத்து விடுகிறோம்


-------------------------

காதல் தொடர்கிறது

நன்றி கெட்ட இதயம்...
எத்தனை நாள் ஊட்டி வளர்த்தேன்,
ஒரே ஒரு பார்வையில் அவளிடம்
தாவி விட்டது
-------------------------

 ஆள்காட்டி விரல்
அழகு காட்டி விரலாகி விடுகிறது,
உன்னை காட்டும்போது...
-------------------------

 பயங்கர கொலை ஆயுதங்களின் பட்டியலில்
ஏன்
உன் கொலுசொலி இல்லை?
-------------------------

 தன்னை முற்றிலும் இழந்து விடும் நிலை
ஆன்மீகத்தில் மட்டுமல்ல
காதலிலும் உண்டு
-------------------------

 போதை ஒழிப்பு தினமாம்......
உன் கண்களை என்ன செய்ய
கிராதகி?
-------------------------

 நானும் அவளும் 20 வருடங்கள் சந்தோசமாக வாழ்ந்தோம்...
பிறகு
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சந்தித்துக்கொண்டோம்


-------------------------

காதல்

எனக்கு பிடித்ததை அவளும்
அவளுக்கு பிடித்ததை
நானும் பேசிக்கொண்டிருந்தோம்,
பிடிக்காதவைகளையும் பேசி இருந்திருக்கலாம்
பிரிய நேர்ந்திருக்காது...


 அவள் என் காதலியாகி
மனைவியாகி விட்ட பிறகு,
"உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்"
என கடவுளை பார்த்துக்கூட
கேட்டு விடக்கூடும் நான்
-------------------------

 உன்னை விட அழகானது உன் கோபம்,
 என்னை விட பரிதாபமானது என் காதல்
#தபு
-------------------------


 "சுவாதிநட்சத்திரத்தில் பிறந்தவள் நான்" என்றாள்,
நிலவில் பிறந்தவள் என்று நினைத்திருந்தேன்,
அதைதாண்டி
நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறாள் போலும்
-------------------------

 நீ பேசு இல்லை
உன் அழகு பேசட்டும்
-இருவரும் பேசினால்
நான் எதை கேட்பது

-------------------------

கவிதைகள் 1

எடையைவிட ஒன்றிறண்டு காய்களை
அதிகமாய் தந்துவிட்டு 'குடுக்கிறதை குடு தாயி'
என கையேந்தும் ரோட்டோரக்கடை கிழவிகளுடன்
பேசப்படுகின்றன
பெரும்பேரங்கள்


 காகத்துக்கும் வைத்தால்தான்
சாப்பிடுவேன் என அடம்பிடிக்கிறது குழந்தை,
காகம் குழந்தையிடம்,
தன் பசி பற்றி
சொல்லியிருக்கலாம்!
-------------------------

 தினமும் சிரிக்கும் என் காதலன்
முதன் முதலாக இன்று அழுகிறான்...!
அவன் கண்ணீரை துடைக்க எழ நினைக்கிறேன்
நான் இறந்திருப்பத்தையும் மறந்து...
-------------------------

 பூஜையில் நடுவீட்டில் அருகம்புல் பிடித்து வைத்திருந்த தெய்வமாக கருதிய ஒன்றை
"அய்யே, சாணி"
என்ற வார்த்தையில் நாத்திகம் பேச துவங்குகிறது மழலை
-------------------------

 என்று வாழ்வின் மீது நம்பிக்கை இழக்கிறீர்களோ, அன்றிலிருந்தே
உங்கள் உடலை மட்டுமே
தாங்கியிருக்கும்
இந்த பூமி

-------------------------

அப்பா


 உணர்சிகளை வெளியே காட்ட தெரியா விட்டாலும் அப்பாக்களின் இதயம் துடிப்பது பிள்ளைகளுக்காகவே..... நன்றி அப்பா..
-------------------------

 தாரம் இறந்த பின் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தாயாய் உருமாறிய அனைத்து தந்தைகளும் தெய்வங்களே

-------------------------