Thursday, November 3, 2022

ஓஷோ வாசகங்கள்

 நைமி இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல எல்லா நூற்றாண்டிலும் மிகச்சிறந்த எழுத்தாளர்


புத்திசாலித்தனம் என்பது உலகின் எந்தப் பொருளாலும் உன் ஆசையை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து கொள்வதே


மரணத்தை நினைவில் வைத்திரு, வாழ்க்கை உன்னை ஏமாற்றாது


அன்பு எந்த ரகசியத்தையும் தன்னுள் வைத்திருப்பதில்லை, அது அனைத்தையும் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறது


உலகிலேயே நம்பவே முடியாதது உங்கள் மனம் தான். இன்று ஒன்றை தேடும், நாளை மற்றொன்றை தேடும். காலையில் ஒன்றிற்கும் மாலையில் மற்றொன்றிற்கும் ஆசை கொள்ளும். கடந்த கணத்தில் என்ன உணர்ந்ததோ, அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றை இப்போது உணரும்


எவ்வளவு பெரிய மனிதனாயிருந்தாலும், அவனுடைய மொத்த வாழ்க்கை கதையை அதிக பட்சம் ஒரு மணி நேரத்திற்கு சொல்லலாம். அவ்வளவு தான் மனித வாழ்வு


நாளை முதல் நான் இப்படி இருப்பது என உறுதியான ஒரு முடிவை எடுக்கிறீர்கள் எனில் மனதின் பத்தில் ஒரு பகுதி மட்டுமே அதை ஆதரிக்கும், மற்ற ஒன்பது பகுதிகளும் அதற்கு எதிராக திரும்பும். எதுவும் இயல்பாக நடக்க வேண்டும்


ஆணவம் என்பது காலம் முழுவதும் எதையாவது ஆசைப்பட்டு கொண்டே இருக்கும் பிச்சைக்காரன், அன்பென்பது தன்னிடம் உள்ள அனைத்தையும் வாரித் தரும் பேரரசன்


மனிதன் புரிந்து கொள்ள முடியாத வித்தியாசமான மிருகம், இறந்தவர்களைப் பற்றி பேசினால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறான், உயிரோடு இருப்பவர்களை கொலையே செய்ய ஆசைப்படுகிறான்.


எந்த ஒரு மிருகமும், பறவையும், மரமும் கூட மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை, மனிதன் மட்டும் தான் வீண் குழப்பம் உருவாக்கி மரணம் நிகழும் வரை நடுங்கிக் கொண்டே இருக்கிறான்


அன்பு ஒரு ஒப்பந்தம் அல்ல. இலாப நஷ்ட கணக்கை அது பார்ப்பதில்லை. இந்த பொருளியல் பூமியில் பொருளியலை கடந்த ஒளிக்கதிர் தான் அன்பு. அதுதான் அதன் அழகு


நிகழ்காலம் என்ற ஒரே அடியில் உங்கள் மிக அருகிலேயே மகிழ்ச்சி இருக்கிறது. ஆனால் அதை மறந்து கடந்த காலம், எதிர்காலம் என மாறி மாறி பல நூறு அடிகள் தாவி மகிழ்ச்சியை தேடுகிறீர்கள், அது அப்படி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை


பெண்ணின் முழு உயிரும் அடுத்தவர்களுக்காக துடித்து கொண்டிருக்கிறது, பெண்மையின் படைப்பே அதுதான் அவளால் தனிமையாய் இருக்க முடியாது எப்போதெல்லாம் அவள் தனியாக இருக்கிறாளோ அப்போதெல்லாம் அவள் துயரத்தில் இருக்கிறாள், எனவே தனிமை ஆனந்தம், களிப்பு என்றால் அவளால் புரிந்து கொள்ள முடியாது


என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்பது அருவருக்கதக்கது, இளமையாக இருப்பதற்காக பலவந்தபடுத்தினால் பதட்டம் தான் அதிகமாகும். ஆனந்தமாக இருக்க முடியாது. வயது கூடும்போது தான் மனிதர்களிடம் அழகும் பொலிவும் பளிச்சிடுகிறது, வாழ்வின் முட்டாள்தனங்கள் அகன்று தெளிவை நோக்கி நகரும் பருவமது


உலகில் மணமானவர்கள் எல்லோருக்குமே இந்த எண்ணம் உண்டு. வேறொருவரை மணந்திருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என நம்புகின்றனர், ஆனால் ஜோடியை மாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் கூட 15 நாட்களில் அவர்களின் புதிய ஜோடியும் பழையது போலவே தோன்றும். இது எதிலும் நிறைவடையா மனதின் தன்மை


ஒருவர் மீது ஒருவர் உரிமை கொள்வதால் திருமணங்கள் காதலின் மீது சமாதி எழுப்பி விடுகின்றன. ஒருவருக்கொருவர் உரிமை எனும் அடிமைச் சங்கிலியிட்டுக் கொள்ளாமல் சுதந்திரம் கொடுங்கள்.


யாரும், யாருக்காகவும் படைக்கப்படவில்லை, ஒவ்வொருவரும் தனக்கென மட்டுமே படைக்கப் பட்டிருக்கிறார்கள்


உங்கள் மனிதத் தன்மை தோலைத் தாண்டி வெளிப் படுவதில்லை, அவமதித்தாலோ, குற்றம் கூறினாலோ உடனடியாக வெளிப்படுவது உள்ளிருக்கும் மிருகத் தன்மையே அன்றி மனிதத் தன்மையல்ல


கொஞ்சம் அன்பு, கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் பகிர்ந்தளித்தல்... இவை சேர்ந்ததே வாழ்க்கை. எனவே கிடைத்த இந்த நொடியை கவலைப்படுவதற்கு பயன்படுத்தாமல் வாழ்வதற்கு பயன்படுத்துங்கள்


மற்றவர்களுக்கு என்ன நிகழ வேண்டும் என எண்ணுகிறோமோ அது நமக்கு நிகழ்ந்தே தீரும்


யாரோ போல வாழ வேண்டும், யாரோ போல சம்பாதிக்க வேண்டும், யாரோ போல மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்; ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே ஒரு தலைசிறந்த படைப்பு. உங்களை மேம்படுத்த தேவையில்லை, அதை உணருங்கள் போதும்


உங்களுக்கு காயங்கள் தருவது, மற்றவர்களை காயப்படுத்துவது, வன்முறையில் ஈடுபட தூண்டுவது, கோபம் கொள்ள செய்வது, பிறருடன் ஒப்பிட்டு சுய பரிதாபம் கொள்ள செய்வது எல்லாவற்றிக்கும் ஒரே காரணம் தான்.... உங்கள் ஈகோ


யாராவது உங்களை நேசித்தால், அவர்களிடம் நன்றியுடன் இருங்கள், அவர்களிடம் ஏதாவது எதிர்பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்.


என் வாழ்க்கை கொண்டாட்டமானது, அதன் பின் விளைவுகளைப் பற்றி எனக்கு அக்கறையோ கவலையோ இல்லை, நான் கொண்டாடத் தான் இந்த பூமிக்கு வந்திருக்கிறேன். அப்படித்தான் வாழ்வேன்


தியானம் என்பது உங்கள் அழகான தனிமையை அனுபவிப்பதே தவிர வேறில்லை. உங்களை கொண்டாடுங்கள்; அதுதான் தியானம்


மனிதன் மகிழ்ச்சியடையவும் கொண்டாடவும் தான் பூமிக்கு வந்திருக்கிறான், மகிழ்ச்சியை விட உயர்வானது என அவனிடம் வேறு எதுவுமே இல்லை


உலகில் மிக கவர்ச்சிகரமான விலை உயர்ந்த பொருட்களை கொடுத்தாலும் நீங்கள் நிறைவடைய போவதில்லை. மீண்டும் வேறு எதையாவது தேடுவீர்கள். அது உங்களுக்கு உள்ளேயே பொங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறியாத வரை உங்களால் மகிழ்ச்சியாக வாழவே முடியாது


என்னுடைய அன்பை அள்ளிக்கொள். என்னிடமிருக்கும் ஒரே செல்வம் இதுதான். எந்த அளவுக்கு அதிகமாக கொடுக்கிறாயோ அது பெருகுகிறது என்பதே அதன் அற்புதம். உண்மையான செல்வம் அப்படித்தான், கொடுக்க கொடுக்க வளர்கிறது. மேலும் அது குறைந்தால் அது செல்வமே அல்ல. -ஒரு கோப்பை தேநீர்


புத்தர் மதத்தையோ, அறிவுரைகளையோ, சித்தாந்தங்களையோ தரவில்லை, அவை அடிமைத்தனத்தை உருவாக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தார், அவர் கொடுத்தது முழுமையான சுதந்திரம், யாராலும் உங்களிடமிருந்து பறிக்க முடியாத சுதந்திரம்


உங்களுடைய ஆசைகள் கனவுகள் லட்சியங்களை பாருங்கள் அவை அதிகபட்சமாக 15 வயது ஆணுடைய அல்லது பெண்ணுடைய மனதில் உள்ள எண்ணங்களின் மறு வடிவமாக பெரும்பாலும் இருக்கின்றன


சோகத்திற்கு இடமே இல்லாத இந்த உலகில் மனிதன் சோகத்தை உருவாக்கி வைத்திருக்கிறான்.



No comments:

Post a Comment