Monday, July 2, 2018

கோவை மக்களின் குடிநீர் உரிமை பறிபோதல் பற்றி


திரு பிறைக்கண்ணன்( தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நீளமான பதிவை வெளியிட்டுள்ளார். மிக முக்கியமான நாம் வாசிக்க வேண்டிய குடிநீர் பறி கொடுத்த மக்களின் போராட்ட கதை. தமிழக மக்களுக்கான எச்சரிக்கை மணி, வெறும் பிரச்சனைகளை மட்டும் பேசாமல் அதன் ஆழத்தையும் அலசி, தற்காத்து கொள்ளும் வழிமுறை வரை விளக்கியுள்ளார்... அவருக்கு பாராட்டுக்களும் நன்றியும்.   

கோவையில் குடிநீரை விநியோகிக்கும் உரிமையை பிரான்ஸை சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தாரை வார்த்துள்ளனர்!
 இது நம்மை எங்கே நிறுத்தும் என்பதை புவியியலில் நமக்கு நேரெதிரே உள்ள தென் அமெரிக்க நாடான பொலிவியா-வில் நடந்ததைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்!

Oscar Olivera - ஆஸ்கர் ஆலவேரா

பொலிவியா - தென் அமெரிக்க நாடுகளில் ஓர் முக்கியமான நாடுநீர் வளத்திற்க்கு குறைவில்லா ஓர் தேசம்!
   
     அந்த நாடு சந்தித்த நீர் சார்ந்த ஓர் Corporate அரசியலையும் அதனை முறியடித்த உலகை மிரள வைத்த ஓர் மக்கள் போராட்டத்தையும்  தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்

பிரேசில், பராகுவே, பொலிவியா இடையே எல்லை கோடுகளே கிடையாது! . ஆனால் இவற்றை பிரிப்பது ஓர் வற்றாத மற்றும் கடலில் கலக்காத ஓர் ஜீவ  நதி தான்ஆனால் பிரச்சனை அங்கு அல்ல!

நாட்டின் மத்திய நகரமான CochoBamba (கோச்சோ பாம்பா)  எனும் இடத்தில் தான்!
1999 ல் ஆண்டிஸ் மழை தொடரின் இயற்கை சூழலுக்கு நடுவே இருக்கும் இந் நகரில் குடிநீரை பொருத்தவரை அரசும், சிறு சிறு நிறுவனங்களும் மக்களுக்கான தேவையை நிறைவேற்றி வந்தன!
    அதாவது அருவியிலும் நீரோடையிலும் இருந்து நீரை எடுத்து விநியோகம் .

திடீரென ஓர்நாள், மக்களே!!,
    
     நாம் சுகாதாரமான நீரைத்தான் பயன்படுத்த வேண்டும், இப்படி மலையிலும், அருவியிலும் வரும் நீரை பயன்படுத்தினால் உடலுக்கு கேடு எனவே நாம் நீர் சுத்திகரிப்பு மையத்தை துவங்க போகிறோம் என ஓர் அறிக்கையையும்

கூடவே சில கட்டுக்கோப்பான சட்டத்தையும் அறிவித்தது அரசு!
(இல்லையில்லை அறிவிக்க வைக்கப் பட்டது)

அடுத்து என்ன நிகழ்ந்தது என்பதை அறியும் முன் பொலிவியா-வின் அப்போதைய பொருளாதார நிலையினை கொஞ்சம் பார்த்து விடுவோம் . அப்போது தான் பிரச்சனையின் அடிநாதமும், அடுத்து நாம் இந்தியாவில் சந்திக்க போகும் அரசின் துரோகங்களையூம் நீங்கள் எளிதாக உணரலாம்
Bolivia வுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியான கால கட்டம் அது!

1.       செப் -1998 IMF (International Monetry Fund) உலக நாணய நிதியகம் $ 138 பில்லியன் நிதியை ஒதுக்கியது பொலிவியாவுக்கு தன்  பொருளாதாரத்தை  சீர் செய்து கொள்ள!
2.       ஆனால் , பொலிவிய அரசாங்கத்துக்கு அந்த பணம் போதுமானதாக இருக்கவில்லை நிலமையை சீர் செய்ய என்பதே நிதர்சனம்.
        
3.       3.ஜூன் - 1999 ல் World Bank ஓர் அறிக்கையை வெளியிட்டது .
4.       இனி எந்த மானியமும் வழங்க முடியாது பொலிவியாவுக்கு முக்கியமாக CochoBamba  வின் நீர்வளத்துறைக்கு, ஆயில் நிறுவனங்கள்முக்கியமாக SEMAPA வும்
   SEMAPA தான் கோச்சோ பாம்பா வுக்கு நீர் விநியோகிகக்கும் ஓர் சாதாரண அரசு நிறுவனம்.

5. SEMAPA வை கையகப் படுத்தியது Aguas del Tunari நிறுவனம்!

சரி இப்போது விடயத்துக்கு வருவோம்

உடனடியாக பணிகள் விறு விறுவென நடந்தேறின! மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் WHO (உலக சுகாதார மையம்) ன் கொள்கைப் படி சிறந்த குடிநீரை நாட்டிலே இங்கு தான் முதன் முறையாக வழங்க போகிறோம் என அங்கலாய்த்தது Bolivian Congress. (அதுவரை இயற்கையான அருவி, ஓடை நீரையே அரசு விநியோகம் செய்து வந்தது) 20 கி.மீ க்கு சுரங்கம் தோண்டப் பட்டு Tunnel அமைக்கப்பட்டது .
அது ஆண்டிஸ் மலைச்சரிவில் இருந்து நீர் கொண்டு வந்து மாகாணத்தின் மையத்தில் சுத்திகரிக்கவும் மேலும் மாநிலம் முழுதும் விநியோகிக்கவும் ஏற்பாடு!

    பணிகளும் சிறப்பாக நிறைவேறியது!
ஆனால் ஒரே பிழை இவை அனைத்தும் அரசு செய்யதிருக்க வேண்டியது எல்லாவற்றையும் ஓர் தனியார் நிறுவனம் செய்து முடித்திருந்தது!

   மக்களுக்கு குடிநீர் வழங்கல் துவங்கியது!  ஒரேயோர் நிபந்தனையோடு :-
அது,

ஆண்டிஸ் மலைத் தொடரில் இருந்து யாரும் நீர் எடுக்க கூடாது, மீறி எடுத்தால் அது தேச துரோகம்! அதற்கு முன்னர் நீரை மலைச்சரிவு ஏரியில் இருந்து எடுத்து மக்களுக்கு  விநியோகித்துக்கொண்டிருந்த  சில உள்ளூர் குறுந் தொழில் வணிகர்கள் அரண்டு போயினர்.

முழு அரசின்  உதவியோடு ராட்சசத் தனமான ஓர் நிறுவனத்தை கண்டால் யாருமே ஓர் நிமிடம் திகைத்து தான் போவோம்!  அதே நிலைதான் அவர்களுக்கும். நகரின் மொத்த Businessம் கைக்குள் அடங்க அதிக சிரமம் எடுக்கவில்லை Aguas  நிறுவனத்திற்க்கு!

ஹூம்ம், ஒன்றை சொல்ல மறந்து விட்டே……னே!
    Aguas del Tunari ஆனது Bechtel என்ற குழுமத்தால் இயக்கப் பட்டது.  Bechtel அமெரிக்காவை சேர்ந்த பெருவணிக நிறுவனங்களுள் ஒன்று.! இதை சரியாக பயன் படுத்திக் கொண்டது US.

மெல்ல மெல்ல தன் வேலையை காட்ட துவங்கியது அமெரிக்கா!
   ஏற்கனவே நாட்டிற்க்குள் தொழிற்சாலைகள், வாகன, மக்கள் நெரிசலால் Pollution மொத்தமும் கெட்டு போய் இருந்தது!

   இதுவரை, நீங்கள் வெறும் நீரை தான் அருந்தினீர்கள். இப்போது pure Mineral Water எனவே Price just Hike!

அடுத்த சில நாட்களில் …,

  நீர் கொணரும் தூரம் அதிகம், எனவே நீரின் விலை உயர்த்துகிறோம்! மின்சார பிரச்சனை எனவே நட்டம்!
அதில் குறை , இதில் ஓட்டை என ஏதேதோ கூறி விலை நிர்ணய உரிமையை தனக்கு மாற்றிக் கொண்டது  அந் நிறுவனம்! 1999 -   அக்டோபர் - 11

    முதலில் 35 % விலை உயர்வை தொடக்கத்தில் ஆரம்பித்த Bechtel ஒன்றரை ஆண்டுகளில் சீரான விலையேற்றம் மக்களை  தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருந்தது!

  மக்கள் மொத்தமாக திணறி போயிருந்தனர்.
குடி நீர் மட்டுமே அல்லாமல், அன்றாட உபயோகத்திற்கான தண்ணீர், Sewage, Drainage என எல்லாவற்றிற்கும் கட்டணம்!

இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் Domestic Water supply மற்றும்
   கழிவு நீர் சுத்திகரிப்புக்கு மட்டும் 93 % விலை உயர்ந்து நிற்கும் என சமூக ஆர்வலர்கள் பதறினர்.

தினம் ஓர் போராட்டம் சிறு சிறு கண்டன கூட்டங்கள் என மெல்ல எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்தனர் மக்கள்!

    சிறு சிறு கூட்டங்களாக நிகழ்ந்தவை, தங்கள் வீட்டு Water Bill இரண்டு மூன்று மடங்கு என எகிர ஒட்டு மொத்தமாக ரோட்டில் இறங்கினார்கள் மக்கள்!

  2000 - ஜனவரி
மக்கள் சாரை சாரையாக வீதிக்கு வந்தனர்.  தங்களின் வேலை, பொழுதுபோக்கு, விழா, சடங்கு என எதையும் பார்க்கவில்லை!

நான்கு நாட்கள் மொத்தமாக கோச்சோ பாம்பா நகரமே முடங்கியது!

சாலைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் நிற்க ஆரம்பித்தனர்.
Transport, School, Theater, Park everything got shut down.
கோச்சோ பாம்பா மாநகரம் முழுவதும் முடங்கி போனது! அரசோ திகைத்து, திகைத்து ஓர் மனநிலையில் வெறுத்து போனது!
யார் இவர்கள் எங்கிருந்து இத்தனை மக்களை திரட்ட முடிந்தது!
      - ஒன்றும் புரியவில்லை அரசுக்கு.!
  
    ஒரே பெயர் தான் விடையாக கிடைத்தது - ஆஸ்கர் ஆலி வோரா. சமூக அரசியல் செயற்பாட்டாளர். அதற்கு பின் கட்டணம் குறையும் என்று எதிர் பார்த்தும் ஒன்றும் நடந்த பாடில்லை!
February - 4 & 5 - 2000

   Oscar தலைமையில் இம்முறை அணிவகுப்பு பேரணியை மேற்கொண்டனர் மக்கள்.
அமைதியான பேரணி ...!
கிட்ட தட்ட நகரத்தின் அனைத்து வீடுகளும் பூட்டிதான் இருந்திருக்க வேண்டும்.
இந்த முறை போலீஸ் தன் வேலையை காட்ட துவங்கியது!
பேரணிக்குள் வன்முறையை தூண்டி விட்டது.
கண்ணீர் புகை குண்டுகளால் இருவர் பார்வையை இழந்தனர். 175 பேர்  படுகாயம் அடைந்தனர்.

இதை Pacific News இதழ் உலகம் முழுக்க கொண்டு சென்றது, "A War over Water " என்ற குறீயீட்டோடு!
அப் பத்திரிக்கையின் செயற்பாட்டாளர் Jim Shultz -ன் பங்கு இப் போராட்டத்தில் மிகப் பெரிய பங்காற்றியது! 
மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியதில் இவர் முதன்மையானவர். தன் கையில் இருக்கும் ஊடகத்தை செம்மையாக பயன் படுத்தினார் தன் மக்களுக்காக!

Bechtel நிறுவன CEO (முதன்மை செயல் அலுவலர்) ! Riley Bechtel க்கு Jim - ன் அறிவுரைப்படி ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் குவிந்தன .

    இது அறிவார்ந்த தளத்தில் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்தது

March - 2000

    ஓர் அங்கீகரிக்க படாத பொதுவாக்கெடுப்பை Political Activities கள் Oscar Olivera தலைமையில் நடத்தினர் 96% மக்கள் Bechtel யை பொலிவியாவை விட்டே வெளியேற்ற வேண்டும் என வாக்களித்தனர்.
ஆனால், இதை அரசு பெரிதாக கண்டு கொள்ளவில்லை!

தொடர்ந்து ......,

     அடுத்தடுத்த போராட்டங்களும், முற்றுகைகளும்
CochoBamba நகரை மட்டுமல்லாமல் நாடு முழுதும் அரசின் மேல் ஓர் வெறுப்பையும் கோபத்தையுமே உண்டாக்கியது! ஆஸ்கர் உடன் பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தியது Bolivian Congress.  ஹூம்ம்ம் ஹும்,  ஒன்றும் வேலைக்கு ஆக வில்லை!
இதற்க்கு இடையில், உலக வங்கி தலைவர் Washington D.C யில் அளித்த பேட்டியில்.  தண்ணீரை இலவசமாகவோ அதற்கு மானியம் வழங்குவதோ மக்களை வீணாக நீரை செலவழிக்க வழி செய்யும் என 1981 ல் பிரான்ஸ்ஸும், இங்கிலாந்தும் தண்ணீரை கொள்ளை அடிக்க பயன்படுத்திய அதே வாசகத்தை பயன் படுத்தினார்.
       ( இதிலேயே இவர்களின் , மேற்குலக கூட்டு களவு திட்டத்தை நாம் உணர வேண்டும்)

அடுத்த நடந்த போராட்டாம் முற்றிலும் வேறு வடிவில் இருந்தது!
நாட்டின் அனைத்து NGO's, இயக்கங்கள், தொழிறச் சங்கங்கள் என அனைத்தும் இணைந்தன!

   அதிபர், ஊரடங்கு உத்தரவு போடும் அளவுக்கு நிலமை போனது!

அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 17 வயது இளைஞன் உயிரிழந்தார்.

தென் அமெரிக்கா முழுதும் பொலிவியாவின் மீது கறித்து கொட்ட துவங்கியது நடுநிலை ஊடகங்கள்.

  இங்கு தான் மக்களின் கோபத்தை சரியான பாதையில் திசை திருப்பினார் ஆஸ்கர்.

வட அமெரிக்காவின் 50 மாகாணங்கள் தென் அமெரிக்க நாடுகள் முழுவதும் என எங்கெல்லாம் உலக வங்கி மற்றும் IMF கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துகிறதோ அங்கெல்லாம் முற்றுகையை போட்டது போராட்ட குழுக்களும் அந்தந்த பகுதி சமூக ஆர்வலர்களும். ஓர் நிலையில், உலக வங்கி இக் கட்டான சூழ்நிலையில் சிக்கும் நிலை!
        (நாம் ஈழ விடயத்தில் அமெரிக்க தூதரகம் மற்றும் .நா அலுவலக முற்றுகையிடுவதை கிண்டல் செய்யும் சில அறிவுஜீவிகள் கவனத்திற்கு)

   தொடர்ந்து நாடு முழுதும் ஆதரவு குரல்களும் பல நாடுகளின் Political Movement களின் ஆலோசனை என கோச்சோ பாம்பா அதிர்ந்தது!

Betchtel நிறுவன நீரை நாடு முழுதும் பெரும்பாலோர் நிராகரிக்க துவங்கினர். பெயரும் கெடத் துவங்கியது!

Betchtel - உலக வங்கியில் நேராக புகார் கொடுக்க ஓடியது!

அடுத்த அரைநாளில் ஆஸ்கர் கலவரம், மற்றும் மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டார் என கைது செய்ப்பட்டார்.
மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

72 மணி நேரத்துக்கு ஒருமுறை உள்ளூர் காவல் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்ற நிபந்தனையோடு அன்றே விடுவிக்கப் பட்டார்.

      அந்த நேரத்தில் சரியாக கோச்சோபாம்பா வை சார்ந்த ஒருவரே அதிபராக பதவி ஏற்க! உலக வங்கியும் போராட்ட காரர்களின் தொடர் முற்றுகையால் தாக்கு பிடிக்காமல் இறங்கி வர,

Betchtel யை வெளியேற்றும் நாள் வந்து சேர்ந்தது!
Bolivian Congress ஆஸ்கரை அழைத்து ஏற்கனவே அவர்களோடு போட்டிருந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதாகவும், அவரின் La Coordinadora கூட்டமைப்பிற்க்கு நீர் விநியோகத்தை ஒப்பந்தத்தத்தை வழங்கியது அரசு.
 
   அடுத்த சில நாட்களில் நிலமை சீரானது, ஆனால் பிரச்சனை வேறு வடிவில் வந்தது!

Betchtel உலக வங்கியில்  $ 25 Million நட்ட ஈடு கேட்டு பொலிவியாவுக்கு எதிராக வழக்கை தொடங்கியது.
40 வருட Contract போட்டோமே நாசமா போச்சே என கண்ணீர் விட்டது. அங்கு தான் ,  Oscar அரசுக்கு கை கொடுத்தார். 125 அரசியல் அமைப்புகளை ஒன்றிணைத்து San - Francisco வில் இருக்கும் Betchtel தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு அதிர வைத்தார்.

   நிலமை கை மீறி போனதால் Oscar Olivera உடன் பேச்சுவார்த்தைக்கு வந்தது Betchtel நிறுவனம். இறுதியில் 1,25, 000 மக்களின் வாழ்வாரத்திற்கு என இறங்கி வந்தது Betchtel.

சரியாக அதற்கு மறுநாள் தென் அமெரிக்க நாடுகளுக்கான  "சுற்றுச்சூழலுக்கான தங்க மகன்" விருதை பெற்றார் Oscar Olivera.

இதில் நாம் உணர வேண்டிய முக்கிய விடயங்கள் :-

*போராட்டம் மட்டுமே நமக்கான, உரிமையை பெற்று தரும். * அனைத்து மக்களை இணைத்து தெருவில் இறங்காமல் அரசை திரும்பி பார்க்க வைக்க முடியாது.

*  அரசியல் அமைப்புகள் கட்சிகள் என அனைத்தும் ஓர் அணியில் திரளுவது அவசியம்.

*  களத்தில் மட்டுமே அல்லாமல் "கருத்தியல் ரீதியான " ஆதரவு நிலையை நாம் உண்டாக்குதல் மிகப் பெரிய தேவை. * மிக முக்கியம், Corporate களுக்கு பக்கெட் தூக்கும் அல்லக்கை களை செருப்பை கழட்டி அடித்தே விரட்ட வேண்டும் .
இவரை ட்விட்டரில் பின் தொடர @piraikannan

No comments:

Post a Comment