வேலா ராமமூர்த்தி எழுதிய இந்த புத்தகத்தை டிஸ்கவரி புத்தக நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதுதான் இவர் எழுதியதில் நான் படிக்கும் முதல் புத்தகம்.
Criminal Tribes Act எனும் குற்ற பரம்பரை சட்டம் இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்ட போது சில குறிப்பிட்ட சமூகத்தினர்மீது அவர்கள் கொள்ளையடிப்பதை தடுக்கும் பொருட்டு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. (அதாவது வெள்ளைக்காரர்கள் மட்டும் திருட வேண்டும் ;) வேறு யாரும் பங்குக்கு வந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் வைத்து கொள்ளலாம் )
ஒரு நூற்றாண்டுக்கு முந்தய வாழ்வை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் வேலா. ஆதிரை, காடு, எனது இந்தியா போன்றவை ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட கொண்டவை, படிக்க சில நாட்களை தின்று தீர்த்தவை. ஆனால் 446 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை தினம் நூறு அல்லது நாற்றைம்பது பக்கங்கள் என்ற ரீதியில் நான்கு நாளில் முடித்து விட்டேன்.
பரபரவென படு வேகமான, மிக அட்டகாசமான வரலாற்று தொகுப்புகளுடன் கூடிய தமிழில் முக்கியமான புத்தகங்களில் இதுவும் ஒன்று.
கொம்பூதி கிராமத்து கள்ளர்களின் வாழ்க்கை தான் கதைக்களம், வீரம், மரணம், காதல், நெகிழ்வு, பசி, மகிழ்ச்சி, தொழில் நுணுக்கம், பழி வாங்கல் என எல்லா சுவைகளும் கொண்ட அறுசுவை விருந்து.
இதில் எனக்கு மிக பிடித்த பகுதி வஜ்ராயினியின் வாழ்க்கை, அவளை பற்றி வேலா எழுதுகையில் மட்டும் காதல் நிரம்பி வழிகிறது. இயற்கை அழகு, கவிதை, மீன்களின் துள்ளல், அந்த மானின் பிரியம், கோபம், உணர்வுகளை கடத்தும் தன்மை என அது வேறு உலகம்
ரயில் கடந்த பின் தண்டவாளம் அதிருமில்லையா, அது போல "ஆங்கார சூறாவளி ஒன்று முன்னோட்டம் காட்டி போனது" என ஆரம்பிக்கும் இப்புதினம் ஓயாத "அழுகுரல் ஊரணிக்கரை அலை சப்தமும் கேட்டுக்கொண்டே இருந்தன வரை" அதிர்வை கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
இயக்குனர் பாலாவும், பாரதிராஜாவும் இந்த கதைக்காக மோதி கொண்டார்கள் என்பது தெரிந்த விஷயமே, பாரதிராஜாவை விட பாலாவின் வடிவத்தில் வெளிவந்தால் பழைமை மாறாமல், சமரசம் செய்து கொள்ளாமல் அருமையான திரைப்படமாக உருவாகும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
ஆனால் பாலா அந்த வருடத்தின் வேறு சம்பவங்களை கதை காலமாக்குவதாக அறிவித்து இருப்பதும் கூடுதல் ஈர்ப்பை தருகிறது.
தமிழில் தரமான கதை விரும்பிகள் தவற விடக்கூடாத புத்தகம் இது.

No comments:
Post a Comment