தம்பி மாமாவின் டீசல் புல்லெட்டை திருட்டு தானமாக ஸ்டார்ட் செய்து ஒரு ரவுண்ட் வருவது ஒன்பதாம் வகுப்பில் கொள்ளை இன்பம் கொடுக்கும். கார் வரை வந்து விட்ட போதும், ஏனோ இன்று வரை அந்த மயக்கம் மாறவே இல்லை, அதிலும் அந்த பழைய வண்டிகளின் கீரும், பிரேக்கும் இப்போது வண்டிகளில் நேர் மாறாக இருக்கும், ஆம்ஸ் நேராக வைத்து ஸ்டார்ட் செய்வது ஒரு கலை. அதிலும் டீசல் புல்லட்டை பள்ளி சிறுவன் நான் ஓட்டி கொண்டு போவதை வாயை திறந்து பார்ப்பவர்கள் முன்னாள் "ஷோ" காட்டுவது அத்தனை பரவசம் தரும்.
பழைய வண்டிகளை எடைக்கு போடும் நிலை வந்து மீண்டு இன்று உச்சத்தை தொட்டுவிட்ட (கேரள இளைஞர்களின் பங்கு அதில் அதிகம், அவர்கள் திடீர் மோகம் கொண்டு புல்லட் நிறுவனத்தை பெரு வாழ்வு வாழ வைத்து விட்டார்கள்) அதன் மீது மீண்டும் மயக்கம் தொற்றி கொள்ள என் மகனும் ஒரு காரணம். அவனது பல்லே சரியாக முளைக்காத தோழன் விதைத்த விதையில் சாலையில் வாகனத்தை பார்த்தாலே துள்ளி குதிக்கும் புல்லெட் வெறியனாக மாறி விட்டான்.
பல்சரில் மூன்றாவது முறையாக விழுந்து காலில் தையல் போடும் நிலைக்கு வந்த பின் ஆக்ட்டிவா போன்ற வண்டி வாங்கி செட்டில் ஆகி விடலாமென்று என் மாமன் மகனிடம் பல்சரை தள்ளி விட்டு கொஞ்ச நாள் அவனின் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என எடுத்து வந்தேன்.
சிறு வயது முதல் கீர் வண்டியே ஓட்டி பழக்கப்பட்ட நான், அதை ஓட்டுவதில் இயல்பே வரவில்லை, சிறிய சக்கரங்கள் வேறு, எனது உயரத்திற்கு (6 feet) என்னை பெண்ணாகவே உணர வைத்தது (தனிப்பட்ட கருத்து, ஆக்ட்டிவா வெறியர்கள் மன்னிக்க)
சரி ஒரு புதிய புல்லேட்டே வாங்கி விடுவோம் என கோவையில் உள்ள ஷோரூம்களுக்கு சென்றால் பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேல் காத்திருக்க வேண்டுமென சொன்னதால் செகண்ட்ஸ் வாங்க முயற்சி செய்தேன்.
1965ம் ஆண்டு G2 வண்டி என ஒன்றை பார்த்தேன் 2 லட்சம் ரூபாய் சொன்னார்கள், அப்படியென்ன இதில் இருக்கிறது என்றால் அதில் ஒரு கிளைக் கதை விரிந்து சென்றது, சுதந்திரத்திற்கு பிறகு இங்கேயே தங்கி விட்ட வெள்ளையர்களுக்காகவும், குறிப்பிட்ட ராணுவ வீரர்களுக்காகவும் இங்கிலாந்தில் இருந்து கொஞ்சம் வண்டிகளை இறக்குமதி செய்தார்களாம், அந்த வண்டிகளின் எஞ்சின் மிக வலுவானதாம், அது சரியாக பராமரித்தால் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு உழைக்குமாம்.
அது வேலைக்கு ஆகாது என பல வண்டிகளை இணையம் மூலம் நான், எனது அப்பா, அவர் நண்பர்கள், என் நண்பர்கள், எனது புல்லெட் ஆசான் தம்பி மாமா என ஒரு படை தேடியது. கடந்த ஒரு மாதத்தில் மாடல் சொன்னால் அதன் புகைப் படம் பார்த்தே விலை நிர்ணயிக்கும் அளவு கிறுக்கன் ஆகி இருந்தேன்.
கடந்த வாரத்தில் தேடி கிட்டத்தட்ட பார்த்த 15 வண்டிகளில் பிடித்த 4 வண்டிகள் விலை கட்டுப்படியாகமல், வண்டியில் வேலைகள் நிறைய இருந்ததாலும் சோர்ந்து இன்னும் கொஞ்ச காலம் ஆக்ட்டிவாவிலேயே பொழுதை ஓட்டலாம் என மனதை தேற்றிக் கொண்டேன்.
சென்ற வார இறுதியில் இணையத்தில் தேடிய போது ஒரு கல்லூரி தாளாளரின் வண்டி பார்க்கையில் பிடித்து போனது விலையும் கட்டுப்படியாகும் என தோன்றி போன் செய்த போது அது ஈரோட்டில் இருந்தது, உடனே எனது மாமன் மகனை அழைத்து வண்டியை பார்க்கும் படி சொன்னேன், அவன் அதை அருகில் இருந்த புல்லெட் மெக்கானிக்கின் கடைக்கே வரவழைத்து சோதனை செய்து "வாங்கலாம் மாமா" என சட்டிபிகேட் கொடுத்தான்.
அப்புறம் என்ன? உடனடியாக அட்வான்ஸ் கொடுக்க சொல்லி விட்டு வண்டியை கைப்பற்றி அடுத்த நாளே ஈரோடு சென்று பணம் செட்டில் செய்து எடுத்து வந்தாகி விட்டது.
புல்லட்டில் standard அல்லது Electra அதிகம் செலவு வைப்பதில்லையாம், வாகனத்திலும் அதிக தொந்தரவு தருவதில்லையாம். நான் வாங்கி இருப்பது Electra வகையறா.
என் மகனுக்கு சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்து, தூங்கி கொண்டிருந்தவனை எழுப்பி "வண்டி வாங்கியாச்சு குட்டிமா" என்றவுடன் வாயெல்லாம் பல்லாக அந்த நாள் முழுவதும் அதை சுற்றி வந்து கொண்டே இருந்ததை, அவனின் டவுசர் கூட ஒழுங்காக போட தெரியாத நண்பர்களை கூட்டி கொண்டு வந்து வண்டியில் ஏற்றி விளையாடி கொண்டிருந்ததை தனி கட்டுரையாக எழுதலாம்
கடைசியாக உங்களிடம் சொல்ல ஆசைப்படுவது
"ஆண்களின் ராஜவாகனமய்யா புல்லட்"

No comments:
Post a Comment