கருப்பு பண ஒழிப்பில் முதல் இரண்டு தினங்கள் உணர்ச்சி வசப்பட்டு மோடிஜி வாழ்க என கூவியது உண்மைதான், ஆனால் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தோமெனில், (மோடியின் தேர்தல் வாக்குறுதிகள் தான்) மண்டை காய்கிறது.
அவை என்னவென நினைவு படுத்துகிறேன்.
அவை என்னவென நினைவு படுத்துகிறேன்.
#மாநிலத்தின் அனைத்து குடிமக்களும் குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவர்
#கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய நடுத்தர வர்தக்கத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
#வரும் 5 ஆண்டுகளில் 16 லட்சம் ஹெக்டேர் பரப்பு விளைநிலமாக்கப்படும்
#விவசாயிகளின் கடன்களுக்கான வட்டியை அரசு பகிர்ந்து கொள்ளும்
#சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கான வங்கிக் கடனுக்கு அரசு உதவும்
#ராமர் கோயில் கட்டப்படும்
#எளிமையாகும் வரி நடைமுறைகள், வரி என்ற தீவிரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, மக்களின் கவலைகள் தீர்க்கப்படும்
#நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு
#அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர், விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கப்படும்
இன்னும் நிறைய இருக்கிறது, படிக்க உங்களுக்கு பொறுமை இருக்காது, கடைசியாய் நான் நம்பி ஒட்டு போட்ட திட்டம்
#லட்சக் கணக்கான கோடி ரூபாய் பதுக்கப்பட்டுள்ளதை மீட்டுக் கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும்...
இதில் ஒன்றை கூட செய்யாமல், சரியான முன் ஏற்பாடு இல்லாமல், திடீரென உள்நாட்டு கருப்பு பணத்தை ஒழிக்க கிளம்பி விட்டார் மோடி... சரி சிரமங்களை கூட பொறுத்து கொள்ளலாம்,
ஆனால், காலம் காலமாய் எந்த திமிங்கலத்திற்கும் வலை வீசப்பட்டதில்லை, இது கருப்பு பண ஒழிப்பிற்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது..
பொறுத்திருந்து பார்ப்போம்...
பொறுத்திருந்து பார்ப்போம்...
ஒன்று மட்டும் நிச்சயம்
சாதாரண குடிமகன் நாட்டின் உயர் பதவிகளை வகிக்க வேண்டுமெனில் அவனுக்கு புத்திசாலித்தனம் தேவை இல்லை, வெறும் வாய் சவடால் போதும்...
மோடியும், அமெரிக்க தேர்தல் முடிவுகளும் இதை உறுதி செய்கின்றன.
மோடியும், அமெரிக்க தேர்தல் முடிவுகளும் இதை உறுதி செய்கின்றன.
No comments:
Post a Comment