நகைக்கடை அடைப்புக்கு ஆதரவும் வேண்டாம்... ஆதங்கமும் படவேண்டாம்... ஏதாவது வைபவம் வைத்துள்ளவர்களும் பதறவேண்டாம்..
வைபவம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து மாற்று வழியை யோசியுங்கள்... நாட்டின் வளர்ச்சிக்காக
வைபவம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து மாற்று வழியை யோசியுங்கள்... நாட்டின் வளர்ச்சிக்காக
இதில் என்ன நாட்டின் வளர்ச்சி என்கிறீர்களா?
2 லட்சத்துக்கு மேல் வாங்கினால் பான்கார்டு அவசியம்
அது போக இந்த அரசு போட்ட கலால்வரி அவர்களை கலங்கடித்து உள்ளது
அது போக இந்த அரசு போட்ட கலால்வரி அவர்களை கலங்கடித்து உள்ளது
எந்த வரியானாலும் பொதுமக்களாகிய நம் தலையில் கட்டிவிடும் இவர்கள் மக்களுக்காக போராடுகிறார்கள்?
அதெல்லாம் இல்லை...
அதெல்லாம் இல்லை...
நம்மிடம் வாங்கி அரசுக்கு வரி கட்டுவதற்க்கு இவர்கள் ஏன் வலிக்க போகிறது? அதற்க்காக போராடுவார்களா என்ன?
நாம் கிராம் 10000 விற்றாலும் வாங்கத்தான் செய்வோம். 1% அதிகமாக கலால் வரி போட்டாலும் வாங்கத்தான் போகிறோம். அது தானே உண்மை...
நாம் கிராம் 10000 விற்றாலும் வாங்கத்தான் செய்வோம். 1% அதிகமாக கலால் வரி போட்டாலும் வாங்கத்தான் போகிறோம். அது தானே உண்மை...
பின் எதற்காக இந்த புரட்சி போராட்டம்
மக்களுக்காகவா போராட்டம் ஆர்ப்பாட்டம் ரோட்டில் நடத்துகிறார்கள் என இனியும் நம்பினால் பிடியுங்கள் இனா வானா பட்டத்தை...
பிறகு?
அந்த 1 சதவீத கலால் வரி தான் ஆப்பாக மாறி விட்டது.
இதற்கு முன் தங்கம் இறக்குமதிக்கு தான் வரி. அதாவது நகை கடைகாரார்கள் எவ்வளவு இறக்குமதி செய்கிறார்களோ அதற்கு மட்டும் வரி. எவ்வளவு விற்பனை செய்கிறார்கள் என்று மத்திய அரசுக்கு தெரியாது, அது மாநில அரசுக்கு தான் விற்பனை வரி (vat) மூலம் தெரியும் அந்த விற்பனைக்கு மட்டும் வரி கட்ட பட்டிருக்கும். இதனால் எவ்வளவு இறக்குமதி செய்யப்பட்டதென மாநில அரசுக்கு தெரியாது
இங்கே தான் பிரச்சனையே..
10 கிலோ நகை வாங்கினால் விற்பனையும் 10 கிலோவாக தானே இருக்க வேண்டும்.
கலால் வரிவிதிப்பு மத்திய அரசு செய்வதால் 10 கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட விபரம் ஏற்கனவே இருப்பதால் கடையில் 10 தங்கம் மட்டுமே விற்க முடியும்.
இறக்குமதி 10 கிலோவெனில் விற்பனை 12 கிலோவாகவோ 15 கிலோவாக இருந்தால் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு கேள்வி கேட்க ஆரம்பிக்கும்.. அந்தப் பதட்டம்தான் முதல் காரணம்.
நீங்கள் நகை வாங்கிய ஏதாவது ஒரு பில்லை பாருங்கள்... 10 கிராம் நகைக்கு செய்கூலி சேதாரம் தனியாக கணக்கில் வந்திருக்காது. அது செய்கூலி சேதாரம் எல்லாம் சேர்ந்து பில்லில் வரும்.
எ.டு 10 கிராம் தங்கம் பிளஸ் சேதாரம் 10% அதாவது 1 கிராம் இதையும் சேர்த்து 10+1=11கிராம் விற்பனை செய்தாக பில் போட்டு அதற்கு vat போட பட்டிருக்கும். மாநில அரசுக்கு தேவை எவ்வளவு விற்பனை ஆகிறதோ அதற்கு தான் வரி. இதுவரை இதனால் ஒரு இடரும் இல்லை.
ஆனால் கலால்வரியால் 11கிராம் விற்பனை என்று பில் செய்தால் அதற்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும், நமக்கு கொடுத்தது 10 கிராம் மட்டுமே, மீதி 1 கிராம் அவர்களிடம்தான் இருக்கும். சேதாரத்தின் தங்கம் அவர்களிடம் சேரச் சேர அவர்கள் வாங்கியதிற்க்கும் விற்றதற்க்கும் கடையில் இருக்கும் இருப்பு, அவர்கள் இறக்குமதி செய்ததைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்... இதனால் தங்கம் பதுக்கல் என அந்த கடையின் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு முழு உரிமை உண்டு
அடுத்து தங்க கடத்தல்
இதுதான் பேரிடி
கருப்புபணம் உருவாக்குவதும், அதற்கு இவர்கள் உடந்தையாவதும் இங்குதான். இனி இது நடக்க வாய்ப்பில்லை என்பதே இவர்களின் பெரும் பயம்.
இதுதான் பேரிடி
கருப்புபணம் உருவாக்குவதும், அதற்கு இவர்கள் உடந்தையாவதும் இங்குதான். இனி இது நடக்க வாய்ப்பில்லை என்பதே இவர்களின் பெரும் பயம்.
கடத்தி வரப்படும் 90 சதவீத தங்கம் பொதுமக்களிடமா இருக்கும்? சிறிய குழந்தை கூட சரியான பதில் சொல்லும். அது நகைக்கடை முதலாளிகளிடம் தான் போகும் அல்லவா?
இது 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகைகளை கொள்ளை லாபத்திற்க்கு விற்பனை செய்யும் வியாபார தந்திரம்.
மத்திய அரசின் நேரடி பார்வைக்கு வந்துவிடும் போது கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில் மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது.
சேதார தங்கத்தை கூட வாடிக்கையாளர்களுக்கு தரும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். கடத்தி வரப்படும் தங்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கப் படும். நியாயமான லாபம் மட்டுமே கிடைக்கும்... நியாயமான லாபத்தில் அந்த பரம ஏழைகளால் வாழ முடியுமா என்ன? ஹஹஹஹ...
புரிகிறதா புரட்சி போராட்டம்?
watsappஇல் வந்தது, நிறைய சொற்பிழைகளும் எழுத்து பிழைகளும் இருந்ததால் எடிட் செய்து வெளியிட்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment