நடிப்பில் நன்கு தேறி வருகிறார் கௌதம்கார்த்திக்,
கருப்பு மேக்கப்பில் பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு குடியேறிய மக்களில் ஒருவனாக சிறப்பு... சண்டை காட்சிகள் இயல்பாய் இருக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நல்ல ஆரம்பத்தை அவர் குருவே பட தயாரிப்பின் மூலம் கொடுத்திருக்கிறார். எதிர்பார்க்கும் படங்களின் இயக்குனராக வருவாரா என்பது அவரின் இரண்டாம் படத்தில் தெரியும்.
"இங்கே நல்லவன் கெட்டவன் யாரும் கிடையாது, அதிஷ்டத்தை தேடி அலையிற துரதிஷ்டசாலிகள்தான்"
யாத்ரிகா பாடலில் அந்த பிரிவு, ஆறு, புத்தர் சிலை, மீண்டும் பர்மா பயணம் என பர்மாவை மிக அழகாய் படம் பிடித்திருக்கிறார்கள்.
"உனக்கென்ன கலெக்டர் வேலையா கிடைச்சுச்சு உங்கொப்பன் பெருமைப்படுறதுக்கு?"என இடையிடையே வரும் பாலா பட டைப் கலாய்தல்கள் சிரிப்பை வர வைக்கின்றன. அதேபோல எதிர்பாராத அந்த துரோகமும்.
இந்தியாவில் இருந்து பர்மாவிற்கு கொண்டு செல்லப்படும் தங்க கடத்தல் சீன்கள் சாதாரணமாக இருந்தாலும் பரபரக்க வைக்கிறது. இடைவேளையில் தரப்படும் மிகப் பெரிய ட்விஸ்ட் சரியாத பாதை கிடைக்காமல் தடுமாறி பின் ட்ராக்கில் வந்து சேர்க்கிறது. ஆங்காங்கே அயன் போன்ற சில படங்கள் நினைவு வருவதை தடுக்க இயலவில்லை
கிளைமாக்ஸ்....
சரி வேண்டாம், அதை பற்றி சொல்லி உங்கள் ஆர்வத்தை கெடுக்க விரும்பவில்லை.
ஒருமுறை தாராளமாக பார்க்கலாம்.
No comments:
Post a Comment