மொழி தெரிய வேண்டிய அவசியம் இல்லை, இயற்கையின் சப்தங்கள், அவற்றின் மொத்த அழகு, சிறந்த பிரார்த்தனைகள், பல்வேறு வகையான வாழ்க்கை முறை அதற்கு கோர்த்திருக்கும் வலுவான இசை, பதினான்கு மாத கடுமையான உழைப்பு எல்லாம் சேர்ந்து கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறது Baraka என்னும் அற்புதம்.
Ron Fricke என்பவர் இயக்கியுள்ள இப்படம் 1992ல் வெளி வந்தது, இன்னும் ஐம்பது ஆண்டுகள் கடந்தாலும் வியப்பில் ஆழ்த்தும். இருபத்தி நான்கு நாடுகளில் இருந்து காட்சிகள் பரவுகின்றன, இயற்கையின் அழகை, கொண்டாட்டங்களை, மனித இயந்திர வாழ்வை, சோகங்களை எந்த குறிப்பையும் சொல்லாமல் முன் வைத்து விட்டு நகர்கிறது.
பெரும் காட்டுதீ, புத்தர் பெரிய முகம், உடைந்த சிலைகள், மண்ணோடு மண்ணான அரச மாளிகை, வழிபட்டு மனிதர்களின் கொண்டாட்டங்கள், அடர் வனங்கள், மலை சிகரங்கள், கடல் அலைகள், பாலைவன இரவுகள், கென்ய மக்களின் அலங்காரங்கள், ஜெருசேல நெரிசல்கள், கண்ணாடி மாளிகையின் பேரழகு என இதன் பார்வை உலகம் சுற்றி வருகிறது.
விழியிழந்த தேர்ந்த புகைவண்டி புல்லாங்குழல்காரர் தரும் மயக்கும் இசை போல படம் நெடுகிலும் உணர்வுகளுக்கு ஏற்ப கொள்ளை கொள்கிறது இசை. வாகன விரைவு, புகைவண்டி வழியனுப்பல்கள், நிலவு மாறும் கணம், இரவு நிலவு சூரியன் வருகை என ஒரு சில பகுதிகளில் ஒரே இடத்தில நாட்கணக்கில் அமர்த்து ஒரு சில காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள்.
கழுதையின் வண்டியில் தொடங்கும் ஒரு காட்சியில் அடித்தட்டு மக்கள் கொட்டப்பட்ட குப்பைகளிலிருந்து, நாய்களுடனும் பன்றிகளுடனும் சரிசமமாக உணவு தேடி கொள்வது நிச்சயம் மனதை உலுக்கும்.
ஒரே வேலையை சலிப்பில்லாது செய்யும், ஜப்பானிய பங்களாதேஷ் ஊழியர்களின் வாழ்க்கையை சொல்கிறது நிறுவனங்களில் படம் பிடிக்கப்பட்ட காட்சி. நமது கங்கையில் பாதி எரிந்து கீழே விழப்போகும் உயிரற்ற சடலத்தில் கால் உங்களை திகைக்க வைக்கும்.
வரலாற்று கவிதையின் கால் தடம் இது, இருபத்தி ஐந்து வருடங்கள் கடந்தும் கண்களுக்கு விருந்து படைக்கும் அற்புதம்.
பார்க்கும் எவரும் புரிந்து கொள்ளும் மிக சிறந்த உலக படத்திருக்கு உதாரணம் இது
நீண்ட நேர மயக்கும் பார்வைகளின் பிம்பம் இன்னும் விலகாது தொடர்கிறது.
படத்தின் தலைப்பின் அர்த்தம் "வாழ்வின் மூச்சு", குப்பை தமிழ் படங்களை சிலாகித்து கொண்டிருக்காமல் இந்த மூச்சை சுவாசியுங்கள்...
மீண்டும் மீண்டும் இயல்பாய் சுவாசிக்க விரும்புவீர்கள்.

No comments:
Post a Comment