கொங்கு பிரியாணி என்பது வேறொன்றும் இல்லை அரிசி பருப்பு சாதமே.
கொங்கு மண்ணின் பாரம்பரிய சமையலான இது தனிச்சுவை கொண்டது, அசைவ உணவு ஒரு புறமும், அரிசிம் பருப்பு சாதம் மறுபுறமும் வைக்கப்பட்டால், நான் விரும்பி சாப்பிட நினைப்பது இதுவே.
ஓய்வு நேரங்களில் சமைப்பது எனக்கு பொழுதுபோக்கு, என் இந்த சமையலுக்கு நிறைய அடிமைகள் உண்டு.
செய்முறை
தேவையான பொருட்கள்
அரிசி ஒரு டம்ளர்
துவரம் பருப்பு, அவரை பருப்பு இரண்டும் சேர்த்து அரை டம்ளர்
கடுகு கொஞ்சம்
வெங்காயம் சிறியது ஒரு கப்
பூண்டு ஆறு பல்
தக்காளி மூன்று
பச்சை மிளகாய் ஒன்று
கறிவேப்பில்லை
கொத்துமல்லி தலை
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
உப்பு, எண்ணெய், நெய், கடுகு.
தண்ணீர் 3 டம்ளர்.
----------------------------------------------
மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் 2, பட்டை ஒரு துண்டு, கிராம்பு 3 இவற்றை பொடித்து வைத்து கொள்ளுங்கள்
-------------------------------------------------
செய்முறை
அரிசி பருப்புகளை அரை மணி நேரம் ஊற விடுங்கள்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, நான்கு டீஸ்பூன் நெய்யை அதில் கலந்திடுங்கள்.
கடுகு தாளித்து, வெங்காயம் பூண்டு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள், பின் தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, மஞ்சள் தூள், (காரம் அதிகம் வேண்டும் என்பவர்கள் தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்) பொடித்து வைத்துள்ள மிளகு சீரக கலவையை கலந்து ஒரு நிமிடம் வதக்கிய பின், தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
பின் உப்பு, கொத்துமல்லிதலை சேர்த்து அரிசி பருப்பை போட்டு நன்கு கிளறி, மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விடுங்கள்.
சுவையான கொங்கு பிரியாணி ரெடி.
------------------------------------------------------------------------
அதற்கு தொட்டுகொள்ள நிலகடலை சட்னி அருமையாக இருக்கும்.
சின்ன வெங்காயம் பத்து,
வர மிளகாய் 2,
பூண்டு 2 பல்,
கறிவேப்பில்லை நான்கைந்து இலை,
சீரகம் கொஞ்சம்,
மல்லித்தூள் ஒரு ஸ்பூன்,
நிலகடலை தேவையான அளவு (வறுத்தது)
உப்பு.
புளி பெரிய நெல்லி அளவு
புளி தவிர மேற்கூறிய அனைத்தையும் வரிசைபடி எண்ணெய் ஊற்றி வறுத்து, புளி கலந்து மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்தால் வாசனைமிக்க நிலகடலை சட்னி ரெடி.
செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

No comments:
Post a Comment