இன்று இரவு சுமார் ஏழு மணியளவில், ஒரு நாகப்பாம்பு வீட்டில் நுழைந்து விட்டதாக, அம்மா போன் செய்தார்கள், வெளியில் இருந்த நான் அவசரமாக வீட்டிற்க்குள் நுழைந்தேன், படமெடுத்தவாறு ஒரு நாகமொன்று... என்ன செய்வதேன்னு தெரியவில்லை, இன்று பௌர்ணமியாம், கொல்ல கூடாது, (நல்லவேளை மற்ற நாட்கள் எனில் போட்டு தள்ளி இருப்பார்கள்) எனது பக்கத்துக்கு வீட்டில் இருந்த சஞ்சய் யாருக்கு போன் செய்து கொண்டிருந்தான்...
சரியாக 20 நிமிடம் கடந்த பின் இரு இளைஞர்கள் வீட்டிற்கு வந்தார்கள், அதற்குள் அது கொஞ்சம் தட்டு முட்டு சாமான்கள் போட்டிருந்த பகுதிக்குள் நுழைந்து விட்டது, அந்த பகுதி எங்கிருக்கிறது என கேட்டு, அடுத்த ஐந்தே நிமிடத்தில் அதை பிடித்து விட்டார்கள்.
சிறிது நேர விளையாடிற்கு பின் அதை ஒரு காற்று போக வசதி செய்யப்பட்ட பாட்டிலில் அடைத்து விட்டு, வீட்டில் தயாரான குளிர் பானங்கள் அருந்தியபடி என்னிடம் பேசி கொண்டிருந்தனர்.
எப்படி பயமில்லாமல் பிடிக்க முடிகிறது உங்களால் என்ற போது, அவர்கள் அளித்த பதில் ஆச்சர்யத்தின் உச்சம்
" இது குழந்தைக மாதிரி அண்ணா, சும்மா விளையாடும், இப்போ வெயில் அதிகமா இருக்கிறதால எதாவது நிழலை தேடும் அல்லது இருட்டான இடம் நோக்கி போக முயற்சி பண்ணும், இவை பயப்படாம இருக்கும் வரை, யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை, இதுவும் ஒரு பெரிய புழு போல தான்" என்றார்.
"நாக பாம்பு அதும் பௌர்ணமில வீட்டுக்கு வந்திருக்கு, அப்படின்னா விசேசம் தானே?" என்றேன்,
"அது பத்தில்லாம் எனக்கு தெரியாது அண்ணா, என்னை பொறுத்த வரை அது எங்களுக்கு பிரியமான குழந்தை, நாங்கள் அதை பாதுகாக்க முயற்சி பண்றோம், சில சமயம் கடிக்க கூட செய்யும், அதோட இயல்பு அது, அப்பவே நாங்க தடுப்பு மருந்து அரசு மருத்துவமனையில் போட்டுக்குவோம், ஆனால், பாம்பை பற்றி முழுதும் தெரியாத, பழக்கமில்லாத யாரும் அது தீபம் காட்டுவது, பூ போடுவது மாதிரி வேலை ஏதும் பண்ண வேண்டாம், ஏன்னா அது அதற்க்கு பயம் உண்டாக்கலாம், வீட்டுக்குள்ள போயிருச்சுன்னா, நீங்க வெளிய வந்துருங்க, வாசல்னா அருகில் யாரும் இருக்க வேண்டாம், அதை கண்காணிச்சு, அது சரியாய் எங்க இருக்குன்னு எங்களுக்கு தகவல் தந்தா போதும், நாங்க பத்திரமா பிடிச்சு சரியான காடுகளுக்கு வனத்துறை அனுமதியோட விட்டுவோம், இத்க்காக நாங்க காசு வாங்குவதில்லை, எங்கள் குழந்தைகளை நாங்கள் காப்பாற்றுகிறோம்" என்றார்கள்... நெகிழ்ச்சியாக இருந்தது.
உங்களோட நெம்பர் சொல்லு நான் ஒரு tl எழுதி போடவா என்றேன்,
"தாராளமாக அண்ணா" என்று நம்பர் கொடுத்தான் பாண்டி என்ற கல்லூரி செல்லும் சகோதரன்.
கோவையில் உங்களுக்கு பாம்பு வீட்டிற்க்குள் நுழைந்தாலோ வேறு ஏதாவது என்றாலோ உடனே இவர்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள், அவர்களே உங்களிடம் தகவலை கேட்டு விட்டு, அவர்கள் வரும்வரை என்ன செய்ய வேண்டும் என வழி நடத்துவார்கள்.. தயவு செய்து பாம்புகளை கொன்று விடாதீர்கள்.
கோவை மக்களே குறித்து வைத்து கொள்ளுங்க
Save our snakes
Rathish
9787332814
9750809000

No comments:
Post a Comment