எக்ஸ்பிரஸ் சிக்கன் என்று ஒரு ஹோட்டல் மேட்டுப்பாளையம் ரோட்டில் தொப்பம்பட்டி அருகே உள்ளது. பெயர் நன்றாக இருக்கிறது, கார் நிறுத்தும் வசதியும் இருந்தது, கடையும் பார்க்க நன்றாகவே இருக்க, சாப்பிடலாம் என முடிவு செய்து உள்ளே நுழைந்தோம், நானும் என் நண்பனும்.
ஆர்டர் மெனுவெல்லாம் பயங்கரம், விலையும் அதி பயங்கரம். அந்த விலைக்கு தக்க உணவு வருமென எக்க சக்க எதிர் பார்ப்பில் ஆர்டர் செய்தோம். முதலில் ஒரு மலையாள சர்வர், தண்ணீர் வைத்தார், சுத்தம் செய்யபடாத டம்ளர், தண்ணீர் வேறு வித்யாசமான நிறத்தில் இருந்தது. அதை எடுத்து போக சொல்லிவிட்டு, தண்ணீர் பாட்டில் ஆர்டர் செய்தோம்.
சிக்கன் பிரியாணி சொல்லி இருந்தேன், அதில் மருந்து போல ஒரு வாசம், என் நண்பன் சப்பாத்தியும் பள்ளிபாளையம் குழம்பும் சொன்னவனும் நெளிந்தான். பாதியில் வைத்து விட்டு எழ வேண்டி வந்தது. நேரடியாக பத்து நிமிடம் செலவழித்து சொல்லவும் செய்தோம். அதை அந்த கடையின் கல்லாவில் இருந்தவர் உணர்ந்ததாக தெரியவில்லை. (கடை ஓனராம்ல)
இதெல்லாம் நடந்தும், பாதி உணவு தட்டில் இருந்தும் அந்த மலையாளி டிப்ஸ்க்கு தலையை சொறிந்த படி நின்றதுதான் வேதனை. (ஏன் மலையாளிகள் எங்க போனாலும் போழைக்கிறாங்கன்னு இப்போ தெரியுதா மக்களே)
அறிய வேண்டிய கடைகள் மட்டுமல்ல அறியகூடாத, செல்லகூடாத கடைகளும் கோவையில் உண்டு. அதில் ஒன்று இந்த express chicken. பக்கத்தில் ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது, அதன் வாடிக்கையாளர்கள் வேண்டுமானால் தாராளமாக சாப்பிடலாம், பெரிய ஹோட்டல் என்று நம்பி, குடும்பத்துடனோ நண்பர்களுடனோ தயவு செய்து போக வேண்டவே வேண்டாம்.
அய்யா ஹோட்டல் நடத்தும் தெய்வங்களே, ஒரு வாடிக்கையாளர் என்பவர் உங்களுக்கு சங்கிலி தொடர் போன்றவர், அவரால் உங்கள் வருமானத்தை உயர்த்த முடியும், புதிய வாடிக்கையாளர்களை சிபாரிசால் தர முடியும், தயவு செய்து அவரை எளிதாக இழக்காதீர்கள்...

No comments:
Post a Comment