An Occurrence at Owl Creek Bridge என்னும் கதையை அம்ப்ரூஸ் பியர்ஸ் என்பவர் 1891லேயே எழுதி இருந்தார், அது பிற்பாடு குறும்படமாக எடுக்கப்பட்டு பல விருதுகளை அள்ளி குவித்தது.
செர்லாக் ஹோம்ஸ் கதைகள் எப்படி நூற்றாண்டு கடந்த பின்னும் சுவாரஸ்யம் குறையவில்லையோ அதே போல, இதுவும் மிக சிறப்பான திரைக்கதை அமைக்கப்பட்டு youtubeல் காண கிடைக்கிறது.
ஒரு துளி வசனம் கூட இல்லாமல் வெறும் காட்சி அமைப்பில் உருவான கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த கூடிய நல்ல படம். வெறும் பதினோரு நிமிடங்கள் தான் வருகிறது.
இதில் பாடல்களை இணைத்திருக்கிறார்கள், இசையும் பாடலும் அந்த படத்திற்க்கு இன்னும் வேகம் சேர்க்கின்றன.
கதை
ஒரு தண்டனை கைதியை, ஒரு பாலத்திற்கு கீழே அழைத்து வந்து, கை, கால்களை கட்டி, கயிறை கழுத்தில் மாட்டி தூக்கில் போட போகிறார்கள் அதிகாரிகள், அதை நிறைவேற்றும் சமயத்தில், அதிர்ஷ்ட வசமாக அந்த கயிறு அறுந்து அவன் நீருக்குள் வீழ்கிறான், தனது கட்டுகளை அவிழ்த்து, நீருக்கு மேலே வந்து தப்ப முயல்கிறான், துப்பாக்கியால் சுட்டு மீண்டும் அவனை கொல்ல முயற்சிக்கிறார்கள்.
அம்முயற்சியிலும் அவன் தப்பி, தன் வீடு செல்கிறான். அவனுக்காக அவன் மனைவி காத்திருக்கிறான். கடைசி இரண்டு செகண்ட்கள் காட்சியமைப்பு மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறது. ஏன் அத்தனை விருது அதற்க்கு கிடைத்தது என்பது பிறகு உங்களுக்கு புரியும். பட்டென முடிந்து விடும் அந்த காட்சியை சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். பொறுமையாக முழுதும் பாருங்கள்.
மொக்கை தமிழ் சினிமாவை பார்பதற்க்கு பதில், இதற்கு தாராளமாக நேரம் செலவழித்து பாருங்கள், அற்புதமான திரைக்காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே உதாரணம் காட்டி இருக்கிறார்கள்.
கீழே இருக்கும் அந்த படத்தின் பெயரை click செய்து பார்த்து விட்டு, உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக இடுங்கள்.
An Occurrence at Owl Creek Bridge or dead mans dream
No comments:
Post a Comment