இயற்கையை, அழகை, பயணங்களை, புத்தகங்களை, வித்யாசமான கதைகளை நேசிப்பவரா நீங்கள் அப்படியெனில் உங்களுக்கு ஒரு நல்ல படம் ரசித்து பார்க்கும் வாய்ப்பை சார்லி கொடுக்கும்.
2015ம் ஆண்டு மார்டின் இயக்கத்தில் வெளிவந்த துல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா கோபிநாத், கல்பனா, சுபின் நடித்த அட்டகாசமான திரைப்படம்.
வண்ணங்கள் நிறைந்த கண்ணுக்கு முழு திருப்தி தரும் படம் இது.
படம் முழுக்க பயணம், வண்ணங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் தான், துல்கர் கதா பாத்திரத்தை ஒரே வரியில் சொல்வதென்றால், மற்றவர்களை சந்தோஷ படுத்தி பார்த்து விட்டு காணாமல் போகும் மனிதன், அவனை தேடி வரும் பெண் பார்வதி, அபர்ணா தற்கொலை செய்து கொள்ள போகும் டாக்டர், கல்பனா ஒரு எயிட்ஸ் நோயாளி. படத்தில் வரும் சிறிய சிறிய பாத்திரங்கள் கூட மனதை தொட்டு செல்கின்றன.
ஒரு சிறிய அறையில் எத்தனை வண்ணமயமான பொருட்கள், கலை இயக்குனரின் உழைப்பு மிக அபாரமானது. பாடல்கள் கதையோடு பொருந்தி வருவதால் மிக மிக அழகாகவே இருக்கின்றன. கண்கள் நனைய வைக்கும் காட்சிகள், இதயம் தொடும் உணர்வுகள், கண்ணுக்கு இனிமையான நகரங்கள், பாலைவனங்கள், ஆறுகள், மலைகள், குளிர் பிரதேசங்கள், புது வருட கொண்டாட்டங்கள், கடைசியில் தசரா காட்சிகள், விருந்தோம்பல்கள், விதவிதமான வாகனங்கள், அதிலும் அந்த ஸ்கூட்டர் காட்சிகள்... சொல்லிக்கொண்டே போகலாம் போல ஒரு நினைவில் தங்கும் படம் இது.
தமிழில் இப்படி எப்போது சிந்திப்பார்கள் என்ற பொறாமை வருகிறது. இப்போதைக்கு நமது மொழியில் இது போல் சாத்தியமே இல்லை. காட்சி அமைப்பிலும், கேமரா கோணங்களிலும், மணிரத்னம் படத்திருக்கு அடுத்து ரசித்து பார்த்த படம் இதுதான். இன்னும் இரண்டு மூன்று முறை பார்க்கும் எண்ணம் உள்ளது
மிக திருப்தி தந்த படங்களுள் இதுவும் ஒன்று.
நிச்சயம் பாருங்கள், இது உங்களை கண்டிப்பாக ஏமாற்றாது.

No comments:
Post a Comment