Friday, February 7, 2020

கொரோனோ வைரஸ்


சைனா மொழியை கூகுள்ல போட்டு தேடினதுல கொரானா வைரஸ்ன்னா என்ன, அங்க இப்போ என்ன அப்டேட் இருக்குன்னு எனக்கு புரிந்தவரை விளக்குகிறேன்....

汉肺炎新型冠状病毒 இதுதான் கொரானா வைரஸ்கான சைனா வார்த்தை, இதை காபி பேஸ்ட் பண்ணி தேடுங்க, நம்மூரு செய்திகள்ல வெளிவராத தகவல்கள்  நிறைய கிடைக்கும்

பின்வரும் இந்த இரண்டு ட்வீட் கள் தான் கொரானாவின் கொடூரத்தை உலகிற்கு உணர்த்தியது, சமூக வலைதளங்களை  பரபபபாக்கிய முதலில் வந்த செய்தி

"ஒரு ஏஜென்ஸ் பிரான்ஸ் செய்தியாளர் 31 ஆம் தேதி தெருவில் விழுகிறார் அவருக்கு வுஹான் நிமோனியா இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதே காலங்களில் இன்னும் சிலர் மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள் யாருடைய சடலத்தையும் பரிசோதனை செய்ய கொண்டு செல்ல படவில்லை 

அப்படியே தகனம் செய்கிறார்கள், எனவே இறப்புகளின் உண்மையான காரணம் யாருக்கும் தெரியாது"

அடுத்தது கீழே

"என் அம்மாவுக்கும் எனக்கும் உடல்நிலை சரியில்லை,  இங்கே யாரும் உணவு அல்லது மருந்து அனுப்பவில்லை. இன்று என் நண்பர் அனுப்பிய வீடியோ, இப்போது நான் மரணத்தைப் பார்க்கிறேன், உணர்ச்சியற்றவனாக உணர ஆரம்பிக்கிறேன், என் வெப்பநிலை குறையத் தொடங்குகிறது"

"பாதுகாப்பு துறை நான் வாயை மூட வேண்டும் என எதிர்பார்க்கிறது, வுஹானில் ஏற்பட்ட தொற்றுநோய் ஒரு பெரிய மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மனசாட்சி உள்ள நான் எப்படி அமைதியாக இருக்க முடியும், தொலை தொடர்பே இல்லை இந்த டிவீட்டை மட்டுமே செய்ய முடிகிறது, அதிகாரியால் மட்டுமே கொரோனா பாதிப்பு   செய்திகளை வெளியிட முடியும்", என்றது அடுத்த பிரபலமான ட்விட்

கொரானா விலங்குகள் மூலம் அசாத்தியமான முறையில் பரவியது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். முதலில் கண்டு பிடித்த லீ வென்லியாங் என்ற 34 வயது டாக்டரை தவறான தகவல் பரப்புவதாக கூறி கைது செய்து, பின்னர் விடுதலை தந்து நோயாளிகளுக்கு சிகிச்சை தர சொன்னது சீனா அரசு, அவர் கொரோனோ பாதிப்பால் நேற்று இறந்தார்.

"உலகளாவிய சுகாதார அவசரநிலை" என்று அறிவித்தும் தொற்றுநோயைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஹாங்காங் மக்கள்  கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர்.

பாக்டீரியாவுக்கு வளர்ச்சி குறைவு, மருந்து சீக்கிரம் கண்டுபிடிக்கலாம், கட்டுப்படுத்தலாம், அழிக்கலாம். கொரோனோவை போன்ற வைரஸ் அப்படியல்ல, நேற்று ஆறு மாத குழந்தையாக இருந்த ஒருவன் இன்று 20 வயது வாலிபனாக மாறி நாளை 60 வயதுடையவனாக மாறுவது போன்றது, ஏன் இப்படி என கண்டுபிடிக்கவே மாதங்கள் தேவை, பின்னரே மருந்து சாத்தியம். ஆகவே நிலவேம்பு கசாய வதந்திகளை நம்பாதீர்கள், சீனாவில் இணைய கட்டுப்பாடு உண்டு, உண்மை தாமதமாக வெளிவரும் அல்லது வராது, கிட்டத்தட்ட ஒரு கோடி பேரை வுவான் நகரில் தனிப்படுத்தி செத்தாலும் பரவாயில்லை என வைத்திருக்கிறது அவ்வரசு. கொரோனோவை கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியவில்லை என உலகத்துக்கு சொல்லி விட்டார் அந்த அதிபர்.

இந்தியாவிற்கு பயணிகள் மூலம் உள்ளே வருவது தடுக்க படலாம், சீன-நேபாள-இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு குறைவு, அங்கிருந்து பரவ வாய்ப்பு உண்டு. இவ்வளவு மக்கள் தொகைக்கு போதுமான மருத்துவ வசதிகள் சீனாவிலோ, இந்தியாவிலோ மிகக்குறைவு. தற்போது தமிழ்நாடு கொரானாவால் பாதிக்கப்படவில்லை, அதனால் நமக்கு வரும்போது கவலைப்படலாம்,
பாஸிடிவ் பக்கங்கள்

சீன நர்ஸ்களின் பணி மிகவும் போற்றத்தக்கது, நேரம், காலம் பார்க்காமல் பணிபுரிகிறார்கள், அவர்கள் முகமூடிகள் முகத்தையே சிதைத்த போதிலும். தேவதைகள்.

பல நாடுகள் சீனாவில் இருக்கும் தன் நாட்டு மக்கள் திரும்பி வருவதை விரும்பாத போது, இந்தியா தனி விமானத்தில் நம் சகோதரர்களை அழைத்து வந்திருக்கிறது.

கேரளாவில் கொரானாவுடன் வந்தவர்கள் பூரண குணமாகி விட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

பொதுவாக இந்தியர்களின் மரபணு, கொரானாவிற்கு எதிரான தன்மையுடன் காணப்படுகிறது எனவும், பாதிப்பு குறைவாக இருக்கும் எனவும் மரபணு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment