Friday, February 28, 2020

கற்றதும் பெற்றதும் பகுதி 2


சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பகுதி 2.

படித்ததில் சில பிடித்த சுவாரஸ்யமான தகவல்கள் கவிதைகள் கருத்துக்கள்

குழ‌ந்தை அழும்போதெல்லாம்
நான் குதிரையாக‌
வேண்டியிருக்கிற‌து.
இம்ம‌ண்ணில்
என்னைச்ச‌வாரியாக்கி
கைகொட்டி சிரிக்க‌,
குழ‌ந்தைக்குமா ஆன‌ந்த‌ம்?
 -எஸ். வைதீஸ்வரன்

வாழ்க்கை சுருக்கமானது.
பிடிவாதத்திற்கோ, சண்டை போடவோ நேரமில்லை நண்பனே
 -லென்னன்

கண்ணீரை படைத்தது
கடவுளின் தவறா?
ஆனந்தப்பட்டு அதை வடிக்காமல்
அழுது வடிக்கும் மனிதனின் தவறா?

-நீலமணி

கடும் உழைப்பு எதிர்காலத்துக்கு நல்லது. சோம்பேறித்தனம் நிகழ்காலத்துக்கு!

சாவுக்கு இழப்பீடு என்பது நவீன வியாபார உத்திகளில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கிறது. அரசியல் எனும் வியாபாரத்தில் அது மிக பெரிய முதலீடு

அந்த பெண்ணுக்கு பதினெட்டு பாஷைகள் தெரியும், ஆனால் எதிலும் மாட்டேன் என்று சொல்ல தெரியாது
 -டொராதி பார்க்கர்

வாயை திறக்காமல் ஒன்றுமே தெரியாத முட்டாளை தோன்றுவது, வாயை திறந்து அதை ஊர்ஜிதம் செய்வதை விட மேல்
 -மார்க் டிவைன்

சிலர் பேனா கத்தியால் திருடுகிறார்கள்,
சிலர் பேனாவால்...
 -கத்ரி

"இறந்தவர் யாருப்பா?" என்றார் மருத்துவர்
"நான்தாங்க" என்றார் வந்தவர்         
 -மாணிக்கதாய்

தோழி, உனக்கு குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துக்கள் உனக்குள் இந்த திறமை இருந்தது எனக்கு அப்போதே தெரியும்.
 -டோரத்தி பார்க்கர்

பழைய மன்னருடன் நகர்வலம்
வந்ததாய்ச் சொல்லப்பட்ட
பாகனற்ற கிழ யானை
பட்டத்து ஒப்பனையோடும்
ஓசையற்ற சலங்கையோடும்
தெருவில் இறந்து கிடந்தது’.
 -யாத்ரீகன்

புகழ் வார்த்தைகளை நிஜமென்று நம்ப துவங்கும்போது உனக்கு கேடு காலம் ஆரம்பிக்கிறது
 -ஜிம் ஆலன்

உலகின் ஜனத்தொகையில் பாதிப்பேருக்கு பலாப்பழம் பிடிக்கும், மீதி பேருக்கு பிடிக்காது அவர்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வது வழக்கம்
-ஜிம் ஆலன்

"எல்லாமே மாயை எதுவுமே நிலையில்லை" என்ற நான் என் கார்பெட்டுக்கு அதிக விலை கொடுத்துவிட்டேன்

சாகாத இலக்கியம் படைப்பதை விட
நான் சாகாமல் இருக்கவே விரும்புகிறேன்
 -ஆலன்

அடி முட்டாள்
அயோக்கியன்
அதி புத்திசாலி
ஞானி
அனைவரையும் குளத்தில் குதித்தனர்
ஒரே மாதிரி வட்டம் வட்டமாக வந்தது
 -தென்றல்

தவறுகளுக்காக அவமானப்பட்டால் அதை குற்றங்களாக்கி விடுவீர்கள்
-கன்பூசியஸ்

பிரச்சாரம் பொய் சொல்வதன் ஒரு பிரிவு, அதனால் உங்கள் நண்பர்களை ஏமாற்றலாம் நிச்சயம் எதிரிகளை ஏமாற்ற முடியாது
 -வால்டர் லிப்மன்

ஒரு தரம் காதல் என்னை மீட்டு தந்தது
ஒரு தரம் புல்லாங்குழல் என்னை மீட்டு தந்தது
ஒரு வண்ணத்துப்பூச்சியும் என்னை மீட்டு தந்தது
நான்தான் அடிக்கடி தொலைந்து போகிறேன்
 -பூமா ஈஸ்வரமூர்த்தி

நான் எழுதிய புத்தகங்களுக்காக
குடித்த சுருட்டுகளின் காசு கூட அதிலிருந்து கிடைக்கவில்லை
 -காரல் மார்க்ஸ்

நானே வலிய சென்று எம் ஐ டி யில் ஒரு பாட்டு போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது பரிசாக ஒரு சொப்பு மாதிரி கப்பு வாங்கினேன். அதில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை மூன்று
 -சுஜாதா

என் நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம் தெளிவாக தெரிந்து விட்டது, நான் ஒரு சிகரெட் கூட பிடித்ததில்லை ஒரு பெண்ணை கூட தொட்டதில்லை என் பத்து வயதுவரை
 -ஜார்ஜ் மூர்

"தினமும் சமைக்கும் போது இந்த நீரில் தான் சாதனை செய்தோம் என நினைப்பதுண்டா?" என்று சிரித்தாள் குடும்பத்தலைவியாகி குண்டாகவும் ஆகிவிட்ட முன்னாள் நீச்சல் வீராங்கனை
 -முகுந்த் நாகராஜ்

எனக்கு சட்டமியற்றும் அதிகாரம் இருந்தால் மதமாற்றத்தை உடனடியாக தடைசெய்து விடுவேன்
-மகாத்மா காந்தி சொன்னதாக ஹிந்துமித்திரன் இதழில்

அப்பா சொன்னாரென
பள்ளிக்கு சென்றேன்
தலை சீவினேன்
சில நண்பர்களை தவிர்த்தேன்
சட்டை போட்டுக்கொண்டேன்
பல் துலக்கினேன்
வழிபட்டேன்
கல்யாணம் கட்டிகொண்டேன்
காத்திருக்கிறேன் என் முறை வருமென
 -கனிமொழி

சான் பிரான்சிகோவில் ஆப்பிள் கம்பெனியின் புதிய படைப்பான ஐ போனை வாங்க 40 வது ஆளாக க்யூவில் நின்றவர் ஸ்டீவ் வாஸ்னியாக் ஆப்பிள் கம்பெனி நிறுவனர்களில் ஒருவர்

நன்றி வணக்கம் 


No comments:

Post a Comment