Friday, January 31, 2020

கோவை கார்ப்பரேட் நிறுவனமும் ஏஞ்சலும்

கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கே  கோவையில் மிக மிக பிரபலமான ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணி புரியும் பெண் ஊழியை (வசதிக்காக ஏஞ்சல் என வைத்துக்கொள்வோம்)  இரவு பணி முடிந்து நிறுவன வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார், வீடு வரும் முன்னே தொலைபேசியில் யாருடனோ உரையாடிவிட்டு பாதியில் நிறுத்த சொல்லி எனது கணவர் இங்கிருக்கிறார் என சொல்லி இறங்கி அவருக்காக காத்திருந்தவருடன் சென்றுவிட்டார், ஒரு மணி நேரம் கழித்து அந்த நிறுவனத்திற்கு ஏஞ்சலின் கணவர் போன்
செய்து "ஏஞ்சலின் செல்போன் வேறு அணைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது, இன்னும் வீட்டுக்கு வரவில்லை ஏன் தாமதம்?" என கேட்டாராம், அலுவலகத்திலும் வாகனத்திலும் விசாரித்து விட்டு திரும்பவும் ஏஞ்சலின் கணவருக்கு அழைத்து கணவர் தான் பாதியில் அழைத்து கொண்டு போனதாக கூறியிருக்கிறார்.  பதறிப்போன கணவர் நேராக காவல் நிலையம் சென்று விட்டாராம். டிரைவர், கூட வரும் தனியார் நிறுவன காவலர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மூவரையும் போலீஸ் தொலைபேசியில் அழைத்து அங்கே வர வைத்து விட்டது. டிரைவர்,  தனியார் நிறுவன காவலர் இருவரையும் சட்டையை கழற்ற சொல்லி கீழே அமர வைத்து, ஏஞ்சலை என்ன செய்தீர்கள் என மிரட்ட ஆரம்பித்ததாம் காவல்துறை. காலை நான்கு மணி வரை இந்த நிலை தொடர, நான்கு மணிக்கு ஏஞ்சலின் செல்போன் உயிர்ப்பித்திருக்கிறது, கணவர் ஏஞ்சலை அழைக்க "நான் வீட்டுக்கு வந்துட்டேன் நீங்க எங்க போனீங்க?" என அன்பொழுக கேட்டிருக்கிறார் .   "ஏஞ்சல் இன்னும் அரை மணி நேரத்தில் இங்கே வரவில்லை எனில் உங்களையும் விட மாட்டோம்" என  கணவரையும் உட்கார வைத்து விட்டதாம் காவல் துறை. ஏஞ்சல் அவசர அவசரமாக கால் டாக்ஸி பிடித்து காவல் நிலையத்தில் கால் வைத்ததும் ட்ரைவர் தனக்கு தெரிந்த எல்லா கெட்ட வார்த்தைகளையும் ஏஞ்சலின் மேல் உபயோக படுத்தினாராம். கணவரும் காவல்துறையும் ட்ரைவரை ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருந்தார்களாம். ஏஞ்சல் எங்கே போனார், யார் கூட்டி போனது, நான்கு மணி வரை என்ன நடந்தது என நான் அந்த டிரைவரிடம் கேட்கவில்லை   அதெல்லாம் உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
அடுத்த நாள் வழக்கம் போல ஏஞ்சல் தன் கடைமையை செய்ய அலுவலகம் சென்றார். 

No comments:

Post a Comment