Monday, March 2, 2020

திரௌபதி விமர்சனம்

ட்ரைலர் ஏற்படுத்திய பரபரப்பை படம் ஏற்படுத்தவில்லை, இது ஒரு டாக்குமெண்டரி, பலவருடமாக போராடுகிற  ரிச்சர்டுக்கு படங்கள் பெற்றுத்தரும். ஆனாலும் அவர் நடிப்பை மெருகேற்ற நீண்ட தூரம் போக வேண்டும். போலிப் பதிவுத் திருமணங்கள் பற்றிய தகவல்கள் ரசிக்கும்படி இருக்கின்றது. திரௌபதி கேரக்டர் சிறப்பு. பணமில்லாததாலோ என்னோவோ படத்தில் செயற்கை தன்மை அதிகம், நடிப்பை இன்னமும் மெருகேற்றி இருக்கலாம். ஜுபீனின் பின்னணி இசை நன்று. தனிப்பட்ட முறையிலேயே பொதுவாகவோ இயக்குனர் யாரையும் தாக்கவில்லை என்பது ஆறுதல். வக்கீலாக கருணாஸ் வந்து பக்கம் பக்கமாக கருத்து பேசுவது காலக்கொடுமை.

தேநீர் விற்பவரைப் போல வேடமிட்டு இரண்டு கொலைகளைச் செய்யும் இடங்கள், திருமணம் செய்ததாக சொல்லப்படும் பெண்ணின் தந்தை இறப்பது, கழுத்தை அறுக்கும் காட்சிகள் என எதிர்பாராத காட்சிகளும் இதில் இருக்கிறது. கொஞ்சம் பட்ஜெட் கொடுத்தால் நல்ல பரபரப்பான படத்தை மோகனால் தர இயலும்.

படம் பார்க்காமலே ஒரு தரப்பு எதிர்ப்பதற்கும், ஒரு தரப்பு பயங்கரமாக ஜல்லியடிப்பதற்கும் இந்த படத்தில் ஏதுமில்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து. 

ஒரு சீசன் முழுவதும் பேய் படங்களாக வந்து நம்மை சாகடித்ததல்லவா, அது போல ஜாதிப்  படங்கள் தற்போது சம்மந்தப்பட்ட மக்களை தூண்டி நல்ல வசூலை கொடுக்கின்றன. இதை சரியாக புரிந்து கொண்டு மோகன் இரண்டு தலைமுறைக்கு சம்பாதித்து விடுவார். இன்னும் நாலைந்து படங்கள் இரு தரப்பில் இருந்தும் இது போலவே வரும். சம்பாதிப்பார்கள். அதன் பின் மக்கள் வெறுத்துப்போய் தன் சொந்த சோகத்தை பார்க்க போய் விடுவார்கள்.

அதாகப்பட்டது தீபாவளி பண்டிகை போல ஆர்காசமடையவும், ஒரு சமூகத்திற்கே அநீதி இழைக்கப்பட்டது போல நெஞ்சுவலி வந்து கதறவும் இதில் ஒன்றுமே இல்லை அய்யா. 


No comments:

Post a Comment