Friday, March 6, 2020

கடவுளும் பகுத்தறிவும்

கடவுள் என்பவனை கோவிலில், வேளாங்கண்ணியில், தர்க்காவில் குழந்தையின் உடல்நலம் பெற மந்திரிக்குமிடங்களில் கண்டு கொள்ளும் எளியவன் தமிழகம் முழுவதும் என்னைப்போல நிறைய பேர் உண்டு. அவனை மனிதன் என்றோ ஹிந்து என்றோ குறிப்பிட்டாலும் அதை அவன் பெருமையாகவோ அவமானமாக கருத மாட்டான். அந்த வார்த்தையை சாதாரணமாக கடந்து செல்வான்.அவனுக்கு எல்லா மத கடவுள்களும் ஒன்றே. சக ஜீவி. அதாவது சக உயிரை நேசிப்பவன். அவன் அவமானங்களுக்கு பயப்படுபவன், உழைத்து வாழ்பவன், மனசாட்சி மற்றும் நேர்மைக்கு கட்டுப்படுபவன். நாட்டின் குடிமகனாக ஒழுங்காக வரி செலுத்துபவன். குறிப்பாக ஓட்டுக்கு பணம் வாங்க மறுப்பவன். பிச்சைக் காசுக்காக, ஓட்டுக்காக, பதவிக்காக ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே குறி வைத்து தாக்கும் போலி நாத்திகம் பேசுபவனல்ல. தன் வாழ்வை நேரடியாக எதிர்கொள்பவன்.

அவ்வாறு எதிர்நோக்க கையாலாகாத பேடித்தனம் கொண்ட சிலர்,  எளியவர்களின் நம்பிக்கையை கேலி செய்வார்களே அது போல இல்லை அவன் வாழ்வு.

"ராமனும், விநாயகனும் வட நாட்டுக் கடவுள், வணங்காதே என்பவர்களே. ஏசு, அல்லாவெல்லாம் நீங்கள் பிரசவம் பார்க்க பக்கத்து வீட்டில் பிறந்தார்களா? அவர்கள் எந்த தேசம் என்றாவது உங்களுக்கு தெரியுமா? ஒரே ஒரு தடவை அவர்களை வழிபடும் மக்களிடம் கடவுள் இல்லை என நேரடியாக குறை சொல்லும் யோக்கிதை உங்களுக்கு உண்டா? முரசொலியை பிணத்திடம் வைத்து புதைத்து அதை அந்த பிணம் படிக்கும் என்ற போது பக்கத்தில் நின்று பல்லைக் காட்டீனீர்களே, அப்போது இளித்தது நீங்கள் இல்லை, உங்கள் பகுத்தறிவு. கடவுள் இல்லை என்பவன், கடவுள் தான் என் வாழ்வு என்பவனிடம் கடவுள் பற்றி முழுவதும் தெரியாமல்,  A Guide to Rational Living கூட படிக்காமல், அதைப் பற்றிக்கூட தெரியாமல் போலிப் பிரச்சாரம் செய்வது தேவையான ஆணியா?  ஊரெல்லாம் நாத்திகம் எனும் நடிப்பைக் காட்டிக்கொண்டு பெண்டாட்டியை அத்திவரதரிடம் விஜபி தரிசனத்திற்கு அனுப்பும்போது "சோற்றைத்தான் தின்கிறோமா?", என எண்ணியதில்லையா? சிறுபான்மைக்கு ஆதரவெனில் வெறும் நான்கு சதவீதமுள்ள பிராமணர்களின் நலனில் உங்கள் நிலையென்ன?" ஒரு ஆணிற்க்கு ஒரு பெண்ணே அதிகம் என்ற நெறியில் நிம்மதியாக அமைதியாக வாழ்பவனிடம், வளர்த்த மகளை திருமணம் செய்தால் என்ன தவறு என விவாதிப்பவன் என்ன ஜென்மம்?"

என கேட்கத் தெரியாதவன். குறிப்பாக தமிழிலும் பெரியார் எழுதிய புத்தகங்களை ஒரு வரி விடாமல் படித்தவன்.

கடைசியாக ஒன்று... நாத்திகம் தேடி ஓடிய கண்ணதாசன் கூற்று, கடவுள் உண்டு என்பது இயற்கையில் நல் வாழ்வின் வழி, நான் தடம் மாறி தவறான வழி சென்று பின் கண்டு கொண்ட உண்மை. தவிர தமிழகத்தில் நான் இணைந்து பணியாற்றிய நாத்திக தலைவர்கள் பெண் சுகம் காணவும், காசு சம்பாதிக்கவும், சுய நலனுக்காக கட்சிகளுக்கு ஜால்ரா போடவுமே துணை போகிறார்கள், தவிர நாத்திகம் நம் உடலில் தேவையில்லாத இடங்களில் வளரும் மயிர்.ஆழ்ந்த அமைதியில், ஒரு பெரும் ஒளிச்சுடரில் இவை அனைத்தையும் தெரிந்து கண்டு கொண்டேன் ஆகவே ஆஸ்திகமே உயிர்களுக்கெல்லாம் உயிர்....

இங்ஙனம் பொங்கலெனில் முதல் தொலைபேசி அழைப்பாக கிறித்தவ நண்பனிடம் வாழ்த்து பெறும், ரம்ஜான் பிரியாணியை மறக்காமல் அனுப்பும் ஒரு நண்பனிடமும், என் குழந்தை மருத்துவமனையில் இருக்கையில் தன்னிடமிந்த கொஞ்சத்தையும் எடுத்து கொண்டு மருத்துவ மனையில் கொடுத்த மாற்று மத திருமணம் செய்த தோழியையும், நட்பாய் பெற்ற, மனித நேயம் மட்டுமே தான்  வாழ்வு என புரிந்த சக மனிதன்.

கடவுள் உண்டு
கடவுள் உண்டு
கடவுள் உண்டு

தூணிலும்
துரும்பிலும்
உன்னிலும்
என்னிலும்
கடவுள் உண்டு.

நான் நீ சிவம்.

No comments:

Post a Comment