இந்த இரண்டாவது வார வீட்டின் உள்ளிருப்பில் "என்னடா இது" என்ற மன நிலையில் இருந்தேன், சொல்லப்போனால் அதற்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பே வீட்டில் இருந்தபடி வேலை செய்ய சொல்லிவிட்டார்கள். ட்விட்டர் தோழி மேகா, ஜெமோவின் ஒரு சிறுகதை லிங்க் கொடுத்திருந்தார், அதை முடித்துவிட்டு மற்ற கதைகளையும் படிப்போம் என ஜெமோவின் இடம் சிறுகதையை நன்றாக வீட்டில் சூடு இறங்கி கொண்டிருந்த மதியம் 2 மணிக்கு சற்றே எரிச்சலான மனநிலையில் தான் வாசிக்க ஆரம்பித்தேன்,
“கொரங்கா? இதுவா??
“இது பின்ன கொரங்குல்ல?”
“சிரிக்குது?”
“சிரிக்காதா பின்னே? அம்பது ஓடுல்லா உடைச்சிருக்கு?”
அனந்தன் திரும்பி தன் வீடு நோக்கி ஓடினான். என்ற வரிகளுக்கு சற்றே சிரிப்பு வந்தது, மறுபடியும் முதலில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன். வரிக்கு வரி சிரிப்பு தாங்க இயலவில்லை.
“ஏமான், சொறியுது”
“கொரங்கு சொறியாம பின்ன டான்ஸாலே ஆடும்? வெளங்காப்பயலாட்டு இருக்கானே” என்ற போது இருந்த சிரிப்பு
”சாதி நாயர்மாரு என்ன பிடிப்பானுவ?” என்றன் அனந்தன்
“எலிபிடிப்பானுவ” என்றான் தவளைக்கண்னன் கொஞ்சம் சப்தமாக மாறியது.
“ஒண்ணுக்கடிக்கும்பம் புடுக்க பிடுங்கீட்டுப்போற எனமாக்கும்”
“ஆருக்க புடுக்க?” என்றான் அனந்தன். என்ற வரிகளுக்கெல்லாம் என் வீடே அதிரும்படி சப்தமிட்டு சிரித்துவிட்டேன். வரிக்கு வரி சிரிப்பை கூட்டி கொண்டே சென்று விட்டீர்கள் ஜெமோ. அட்டகாசம். எனது தனிமை, கவலை, பணிச்சுமை கடந்த நாட்களின் துயரங்கள் எல்லாம் எங்கோ ஓடி ஒழிந்து விட்டதை போல உணர்வு. படித்து ஒரு மணி நேரம் கடந்த பிறகும்,
"நாயருண்ணா மூளை இருக்கணும். இல்லேண்ணா $ண்ணி இருக்கணும்.. இது ரெண்டும் இல்லேண்ணா என்ன செய்ய?”
"ஹணிமூண் … ஹனுமானுக்கு இங்கிலீஷ்லே"என்பதெல்லாம் ஞாபகத்தில், சிரித்துக்கொண்டே தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். சுமையை மறக்க செய்த உங்களுக்கு நன்றி என்ற வார்த்தை மிக மிக குறைவு ஜெமோ.எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, சக மனிதனின் மனதின் சுமையை முற்றிலும் குறைத்து மகிழ்விக்கும் கலைஞனுக்கு ஒரு சாதாரண வாசகன் என்ன கைமாறு செய்துவிட முடியும்?
அட்டகாசமான நகைச்சுவை குறும்படமாக இடம் சிறுகதையை பதிவு செய்யலாம். தமிழிலோ மலையாளத்திலோ அல்லது ஒரே சமயத்தில் இரண்டிலுமோ, இதை இளம் வருங்கால இயக்குனர்கள் ஜெமோவின் உதவியுடன் முயற்சி செய்ய வேண்டும் என்பது எனது ஆசை.
இந்த சிறுகதையை ஜெமோவின் இணையதளத்தில் படிக்க:
Click இடம் [சிறுகதை]

No comments:
Post a Comment