பஸ் கட்டண உயர்வுன்னு படிச்சேன், ஆதரவு, எதிர்ப்புல்லாம் கட்சிக்காரங்க பார்த்துக்கட்டும், நான் யோசிச்சது என்னன்னா100பேருக்கு மேல அடைக்கிற தனியார், அரசு பேருந்துல 20 பேர்தான் இனி ஏத்தணும்னு சொல்றாங்க, நம்ம ஜனத்தொகைக்கு அது ஒத்து வருமான்னு தெரியல, தவிர இரண்டு மடங்கு ஏத்தினாலும் அது டீசலுக்கே பத்தாது, அப்புறம் பணியாளர்களுக்கு சம்பளம் ஈ எஸ் ஐ., மத்தது, ரிட்டைர் ஆனவர்களுக்கு பென்ஷன்... தனியார் பேருந்துகள் அதோட முதலாளி பணியாளர்கள் நிலை ரொம்ப சிரமம், கால் டேக்ஸியளவு ரேட் வெச்சா சமாளிக்கலாம். இருக்கிற பொருளாதார நிலையில அது சாத்தியமில்லை. அரசு, தனியார், மக்கள் எல்லா தரப்புக்குமே கஷ்டம்தான். இல்லைன்னா இந்த சுமையை அரசு தான் தங்கணும். சாராயம் விக்கிற காசுல எத்தனைய சமாளிப்பார்னு தெரியல. மத்திய அரசுகிட்ட இருந்தும் காசு வர போறதில்லை. அப்படியே ஆயிரம் ரூபா கேட்டா பத்து ரூபா நோட்டை கொடுத்து பத்திரமா செலவு பண்ணுப்பா ங்கிற வழக்கமான அப்பாவாதான் மோடி இருக்கார். கஷ்டம். மொக்கையா இருந்தாலும் ஒரே வழிதான் இருக்கு. அமெரிக்கா, இத்தாலி கூட சீனாட்ட காசு கேட்குது, நாமும் கல்ல வீச வேண்டியதுதான்.தர வாய்ப்பில்லை, ஒருவேளை தந்தா சமாளிக்கலாம் இல்லைன்னா வழக்கம் போல உலக வங்கி கிட்ட கையை நீட்ட வேண்டியதுதான்.
No comments:
Post a Comment