Friday, January 22, 2016

அற்புத கவிதைகள்


சில கவிதைகளுக்கும் பிறப்பு மட்டுமே உண்டு, காலம் கடந்து நிற்கும் கவிதைகள் சிலவற்றை உங்களோடு பகிரவே இந்த முயற்சி  


காதலின் வலியை, தன் ஏமாற்றத்தை  சிறு ஏளனத்துடன் போகனால் போகிற போக்கில் சொல்லி விட முடிகிறது  

"நான் இல்லாவிட்டால் இறந்துவிடுவேன் என்றவளை
நேற்று தெருவில் பார்த்தேன்
கையில் சாத்திய குழந்தையோடு..
 இறந்தபிறகு
 பிறந்ததா இது?"


மிக சில கவிதைகள் மட்டுமே எழுதி இருந்தாலும் வனவை தூரிகாவின் "இந்த பாதசாரிகள் கவனத்திற்கு"  கருணை கிடைக்காத ஜீவனுக்காய் உருகுகிறது 

"கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!"



இல்லாதவன் பிள்ளை என்ன செய்யும், ஏக்கங்களையும், கனவுகளையும் அறிமுகபடுத்திவிட்டு, ஏமாறுவதை இளம் பருவத்திலேயே கற்றுக்கொள்ளும் அவல நிலை ஏழை குழந்தைகளுக்கு    

"இத்துனூண்டு சைக்கிள்
பெரீய்ய பொம்மை
கத்திரிப்பூ நிற கவுன்
மொழுக்கென்று இருக்கும் பழங்கள்
கண்ணும் மனசும் விரிய விரிய கண்டதையெல்லாம்
களிபொங்க சொன்னால் செல்லமகள்
திரும்பும் வழிநெடுகிலும் வீடடைந்த பின்னும்

கைதேர்ந்த வேசியைப்போல் சிங்காரிதிருக்கும்
இக்கடைவீதியின் பண்டங்கள்
பார்த்துக்கொள்ள மட்டுமே தமக்கென்று
இயல்பிலேயே தெரிந்திருக்கிறது இல்லாதவன்

பிள்ளைக்கு....!!"

ராமலக்ஷ்மி எழுதிய  இந்த காட்சி கவிதை சட்டென கடந்த காலத்தை கண் முன்னே பார்வைக்கு வைத்து விடுகிறது 

யாருமற்ற பாதையில்  நெடுநிழல் துணை கொண்டு
தலையில் கோணிப்பையுடன் தளர்வாக நடந்த பெரியவர்
முகத்தில்
ஆதித் தகப்பனின் சாயல்.

"என்னத்தடா வாழறீங்க நகர வாழ்க்கையில்" என்று போட்டிலடித்தது  போல் கேட்கிறார் தாயம்மா   

நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை

முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சு திணறியதில்லை

கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்றதில்லை

அடுக்கு பானை
அரிசி திருடி
ஆற்று சோறு ஆக்கியதில்லை

ஆனாலும் சொல்கிறாய்
"i am living" என்று

காயம், வலி, உணர்வுகள் என்ற அனைத்தையும் ஒரே வரியில் வைத்தார்  ஷேசாம்

"ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல"
-


 கோவை சந்திரசேகர் ஒரு முகநூல் எழுத்தாளர், எப்போதாவது கவிதை எழுதுகிறவர், மரணம் பற்றி அவர் பார்வையில் இருந்து   


"இறந்தவர்களின் உடைமைகள்
நினைவு படுத்துகிறது
இறந்தவரின் வாழ்ந்த காலத்தை.
அவரது கொண்டாட்ட தருணங்களை,
அவரது துயரத்தின் வடுக்களை..
உளுத்த மரத்தை கரையான்கள் தின்ன,
கரையான்களை பாம்புகளும்
பாம்புகளை பருந்துகளும்
பருந்தை பசியும் கொல்வதாக..
ஒரு நெய் பந்தம் பிடித்து நடக்கும் சிறுவனை
வழியெங்கும் மலர் தூவி வரவேற்கலாம்.
இடது கையால் எள் தண்ணிர் இறைக்கும்
இடப்புறங்கையால் எண்ணெய் தடவும்
உத்திரகிரியை பத்திரிகை ஓரங்களில்
கருமை தடவும் கரங்களுக்கு
உங்கள் சமாதானத்தை தரலாம்..
இல்லை.,
ஈமச்சடங்கு முடித்து
கிழக்கு நோக்கி கும்பிடும் கரங்களுக்காக
ப்ராத்திக்கலாம்...
வேறன்ன செய்யமுடியும் உங்களால்.."

கலாப்ரியா

சோம சுந்தரம் என்ற கலாப்ரியாவின்  கவிதைகளில் பாலுணர்வுக்கு முக்கியத்துவம் அதிகமெனினும், வன்முறையையும் அதிகளவில் பிரயோக படுத்தகூடியவர், அழகியல் பற்றிய கவலைகொள்ளாமல், வார்த்தைகளை வைத்து விளையாடுவதில் வித்தகர்...    




பாண்டி ஆட்டத்தின் முதல் உப்பை
நான் கடவுளுக்கு கொடுத்தது கிடையாது,
முதல் பல் விழுந்த போது
சாணத்தில் கரைத்து நான்
சொர்க்கம் நோக்கி எறிந்தது கிடையாது,
ஒரே ஒரு முறைதான் நூலில் பட்டாம் பூச்சிகளை
கட்டி பறி தவிக்க விட்டிருக்கிறேன்,
இருந்தும் நிழல்கள்
மீட்டாத தண்டவாள சோகங்களை


எனக்கேன் நிரந்தரிதாய் சசி

வலைபாயுதே



ரசித்த சில ட்விட்கள்

டுபாக்கூர் ஏஜெண்டுகிட்ட சிக்கி துபாய்க்குப் போகமுடியாத பார்த்திபன், வெற்றிகரமா துபாய்க்குப் போய்ட்டு வந்த வடிவேலுவை ஓட்டுறதுதான் Irony! :)

@kiramaththan

ஓட்டே போடாம அரசியல் பத்தி பேசுறது.
படமே பாக்காம பட விமர்சனம் செய்றது.
வயலே பாக்காம விவசாயம் பத்தி பேசுறது
யாருங்க நீங்க - டிவிட்டர் பிரபலம்
@DinuVj

ஈகோவைத்தான் நிறைய பேரு கெத்துன்னு நினச்சுக்கிட்டிருக்காங்க
@SelvaaRocky

தி.மு.க என்பது நமக்கு தெரியாதிருக்க பினாமி வைத்து தெளிவாய் திருடுவது, அதிமுக என்பது நமக்குத் தெரிந்தால் என்ன என்று திமிராய் திருடுவது.
@moon_inthewell

குழந்தைகளின் கோபமும் சண்டையும் அடுத்த விளையாட்டு ஆரம்பிக்கும் வரை தான்!ஆனால்
பெரியவர்களின் சண்டை தான்
அடுத்த தலைமுறைகள்  வரை நீடிக்கிறது!!
@ponkulanthai

எல்லோருடைய வாழ்க்கை புத்தகத்திலும் கிழித்து எறிந்து விட நினைக்கும் பக்கம் இருக்கத்தான் செய்கிறது...!!!
@shefnatwits

TR : என் புள்ள சட்டைல சின்ன கரை பட்டாலும் உன்ன செதச்சிடுவேன்

பாண்டவர் அணி : அப்ப அவன் சட்டைய கழட்டிட்டு அடிங்கடா
@MrElani

இனி ஒன்றுமில்லை என அழுது தீர்க்கும் பொழுது
கடைசி நொடியில் பிறக்கும் துணிவுதான் மீண்டும் வாழ்வை
வாழச் சொல்கிறது.!
@dhivya_iam

நாரதனால் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது..
அதனால்தான் கடவுள் உறவினர்களை படைத்துள்ளார்
@Shalinii_

நான் நல்லவன் என்பதற்கு சாட்சி , நான் செய்த எந்த தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே !
@Kathirru

விருப்பமில்லாதவர்களை சுமக்காதீர்கள், உயிரற்ற உடல் போல் கனப்பார்கள்.
@tejomayan

இட்லி தோசை பொங்கல் உப்புமா கிச்சடி எனும் பஞ்சபாண்டவர்களுக்கென படைக்கப்பட்ட திரெளபதி தேங்காய்சட்னி
@mpgiri

"மயிராப்போச்சு போ" என்ற மனநிலைக்கு வந்தவுடன் பிரச்சனையை அணுகுவது சுலபமாயிருக்கிறது.
@svenkad

ஒரு மழலை செமயா அழுதுட்டே வந்து வாசப்படி ஏறும்போது கவனமா அழுகை நிறுத்திட்டு கை ஊனி விழாம ஏறி திரும்ப அழுகைய தொடருது :-)
@arattaigirl

ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம்.
@nmravikumar

நிறைய நேரமும் குறைவாகப் பணமும் செலவழித்து வளர்க்கப்படும்  குழந்தைகள் வீணாகப் போவதில்லை...
@mekalapugazh

இப்போதாவது புரியுமா. பணமோ, அழகோ, சாதியோ, மதமோ எதுவுமில்லை. வாழ்ந்த விதம் மட்டுமே ஒருவருக்கு பெருமை சேர்க்கும்.
@r_vichu  

Thursday, January 21, 2016

மரம் காத்த பெண் டார்ஜன்கள்

மரம் வெட்டுவதற்கு எதிராக விநோபாபாவேவும், பகுணா என்பவரும் பல்லாயிரக்கணக்கான தூரம் நடந்தே சென்று பிரசாரம் செய்து சிப்கோ என்ற இயக்கத்தை வளர்த்து எடுத்தனர்

உத்தர்கந்த் மாநிலத்தில் ரெனி எனும் கிராமத்தில் இருந்த மரங்களை வனத்துறை சார்ந்தவர்கள் வெட்ட முயன்றனர், அந்த மரங்களை வெட்டும் முன்பு தங்களை வெட்டி விட்டு பின்னர் மரங்களை வெட்டுமாறு அப்பகுதி பெண்கள் மரத்தை கட்டிப்பிடித்து நின்று கொண்டனர்.

அதன்பின் எவ்வளவோ முயற்சி செய்தும் அப்பெண்களை மரத்திலிருந்து பிரிக்க முடியாமல் அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்பி சென்று விட்டனர்
அவர்களே பெண் டர்ஜன்கள் என அழைக்கபட்டனர்.
ஒரு துளி  வன்முறை கூட  இல்லாமல் கிடைத்த வெற்றி அது!

சிப்கோ என்றால் கட்டிகாப்பது என்று பொருள், இந்த இயக்கத்தில் பெரும் பகுதி பெண்களே இருக்கிறார்கள் 

பின்னர் இதுவே பேரியக்கமாக மாறி காட்டில் உள்ள மரங்களை  வெட்ட அனுமதிக்காமல் வளங்களை காப்பாற்றி வருகிறார்கள், பெண்கள் ஒன்றிணைத்தால் எவ்வளவு வளங்களை கெடுக்கும் கூட்டத்தை அது எவ்வளவு வலிமையாக இருந்தாலும் கூட துரத்தலாம் என்பதை செயல்கள் மூலம் நிரூபித்தது அந்த இயக்கம்  

தமிழ்நாட்டிலும் பெண்கள் இருக்கிறீர்கள்,  இங்கும் மரம் வெட்ட பட்டுக்கொண்டு இருக்கின்றன, நமது நில வளங்களும் அழிந்து கொண்டு இருக்கின்றன என்பதையும் நினைவு படுத்துவது எனது கடமை      

மூலம்: எனது இந்தியா, எஸ் ராமகிருஷ்ணன்  

எழுத்தாளர்களின் இணையதளங்கள்

ஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது, முன்பு இது போல் பலர் கொடுத்து இருந்தாலும் பாதிக்கு மேல் உள்ள தளங்கள் விற்கப்பட்டோ, செயல் படாமலோ தான் இருந்திருக்கிறது, தேடி தேடி படிக்கும் பழக்கமே இவர்களை தேடி போக செய்தது. 

நான் குறிப்பிட்டுள்ள வரிசையை வைத்தெல்லாம் எழுத்தாளர்களை எடை போட்டு உயர்வு தாழ்வு பார்க்க வேண்டாம், அவை எனக்கு கிடைக்கும் போதெல்லாம் சேர்க்கப்பட்ட பெயர்களே...

நான் கீழே கொடுத்துள்ள அனைத்து எழுத்தாளர்களின் இணையதளமும் தற்போது செயல்பட்டு கொண்டிருப்பவையே, நான் தொடர்ந்து படிப்பவையே. எழுத்தாளர்களின் இணைய தளத்திற்கு செல்ல அவர்களின் பெயர்களை கிளிக் செய்யவும். எனக்கு புதிதாய் நிறைய இணைய தளங்களை இணைக்க பரிந்துரைத்த அத்தனை ஸ்நேகங்களுக்கும் நன்றி. 

எனது முயற்சிக்கு தனது வலைப்பக்கம் மூலம் வெளிச்சம் தந்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு மிகுந்த நன்றி 

நான் எடுத்த முயற்சிக்கு முன்னோடியாக அமைந்த ஆபிதீன் பக்கங்களுக்கு சிறப்பு நன்றி. 


ஜெயந்தி சங்கர் 


கே என் செந்தில் 

இமையம்

 வே. மதிமாறன் 

 R P ராஜநாயஹம்

 எஸ். சங்கரநாராயணன் 

 பைரவன்

 எம் ரிஷான் ஷெரீப் 

 கோவை ஞானி 

 சி. சரவணகார்த்திகேயன் 

சவுக்கு சங்கர் 

பி.எஸ். ரங்கநாதன் (கடுகு) 

அப்பணசாமி 

அனோஜன் பாலகிருஷ்ணன் 

அர்ஷியா 

அருண் நரசிம்மன்

 விநாயக முருகன்

 எஸ்.எம்.ஏ.ராம் 

 கவின் மலர் 

 சிறில் அலெக்ஸ் 

 சுரேஷ் பாபு 

 சேவியர் 

 தருமி 

 தாரா கணேசன் 

 பாலா கார்ட்டூனிஸ்ட் 

 பாரதி நாதன்

 






ஏதாவது பெயர் விடுபட்டு இருப்பின் தெரியபடுத்தினால், சேர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்.  


பிரியங்களுடன் 
பிரகாஷ்






Wednesday, January 20, 2016

ராம் வசந்த் கவிதை

அப்பா.!
இன்னிக்கி
பீஸ் கட்ட கடைசி நாள்
என பிள்ளை நினைவூட்ட ..
அவன் வகுப்புக்கு வெளியே
நிற்பதும் நிற்காததும்
இன்று மனைவியின்
கையில்தான் இருக்கிறது .

போன முறை

அவள் காதில் இருந்தது..!"