பொதுவாக பொருளாதாரம், கடந்த கால வரலாறு போன்ற புத்தகங்கள் போரடிக்க கூடியவை, விதி விலக்காக மதன் தமிழில் சுவாரஸ்யமாக எழுதுவார். அதுவும் கிமுகிபி அட்டகாசமாக வந்த புத்தகம். அதற்கு அடுத்தபடியாக பா ராகவன் அமெரிக்காவின் கதையா டாலர் தேசம் என்ற பெயரில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வெளியிட்டிருக்கிறார், நான்கு நாட்களில் 600 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தை இன்றுதான் முடித்தேன்.
ஒரு ராட்டினத்தில் அமரவைத்து மிக உயரமாக சென்று கீழிறங்கியதை போல ஜெட் வேகம். மூன்று நாட்களிலேயே படித்து முடிக்க முடிந்தது. அமெரிக்காவை கண்டுபிடித்ததில் இருந்து சதாம் உசேனை பிடித்தது வரை பல புத்தகங்கள் மற்றும் இணைய தளங்கள் உதவியுடன் எழுதி இருக்கிறார். மக்களை உணவுக்கே கையேந்த விட்ட அமெரிக்கா எப்படி வல்லரசானது, வெளியுறவு கொள்கை என்று படிக்கிறோமே அது என்ன? உலகில் ஏதாவது ஒரு மூலையில் இன்னமும் ஏன் போர்கள் நிலவுகின்றன, அங்கெல்லாம் பொருளுதவி, எக்கச்சக்கமான பண உதவி கொண்டு ஓடி வந்து அமெரிக்கா உதவுகிறதே எதனால்? என்பது போன்ற எக்கச்சக்க கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறது இந்த புத்தகம்.
அந்தந்த காலகட்டங்களை நேரடியாகவே கூட்டிப்போய் திரைப்படம் காட்டுவது போல் காட்சிகளை விவரிக்கிறார் எஸ் ரா., ஜார்ஜ் வாஷிண்டனுக்கு முன்னாலேயே ஏழு அதிபர்கள் ஆண்டாலும் அதை மறைத்த இருண்ட பக்கங்களின் வரலாற்று குறிப்பு, உண்மையான அமெரிக்கர்களான செவ்விந்தியர்களின் பரிதாப நிலை, லிங்கனின் வரலாறு,
கறுப்பினத்தவர்களின் அடிமைப் புரட்சி, முதல் உலக யுத்தம் கொடுத்த லாபம், டாலர் சம்பாதிக்க ஆரம்பித்த வழி, அதன் பின் வந்த சோசலிச கம்யூனிஸ போட்டிகள், உருவான நவீன அமெரிக்கா என ஜரூராக முதல் பாகம் செல்கிறது.
ஹிட்லர் ஆடிய ஆட்டங்கள், அவரின் வீழ்ச்சி, பேர்ல் துறைமுக அழிப்பு, தொடர்ந்த அந்த ஹிரோஷிமா நாகசாகி பயங்கரம், ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்குமான பனிப்போர், அதன் விளைவுகள், வியட்னாம் என்றொரு குட்டி தேசம் ஏற்படுத்திய ஆறா காயங்கள். மார்ட்டின் லூதர் கிங் என முழுவதையும் ஒன்று விடாமல் அலசி அதில் சுவாரஸ்யமானதை தொகுத்து ஆத்ம சுத்தியுடன் (குறைத்து ஐம்பது இடங்களிலாவது ஆத்ம சுத்தி வருகிறது) கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
குஜாலான கிளிண்டன் மோனிகா பக்கங்களும் உண்டு, கனிம வளங்களை வளைக்க செய்யும் யுத்திகள், ஹமாஸும், பின்லேடனும், சதாம் உசேன் பகுதிகளும் எக்ஸ்பிரஸ் ஓட்டம், திகில் தரும் திட்டமிட்ட சம்பவங்கள். அதிலும் கால்வாசி புத்தகம் பின் லேடன் பற்றித்தான். செப்டம்பர் 11ம் தேதி சம்பவங்களின் பக்கத்திலே யாரோ தீவிரவாதி அமர்ந்து திட்டமிட்டது போல தொகுப்பு ஜில்லிட வைக்கிறது. சரியான திட்டமிடல், அதற்கு தகுதியான ஆட்கள், ஊடுருவும் போராளிகள், பயிற்சி, கடைசி வரை ரகசியம் காத்தல், தனி மனிதனாக உலகின் ஒரே ஒரு வல்லரசுக்கு அறை கூவல் விடுதல் காரியத்தை கச்சிதமாக செய்து முடித்தல் என பின் லேடன் பகுதி ரணகளம். அதுசரி, பின்லேடனை விட்டுவிட்டு அமெரிக்க சரித்திரம் எழுத முடியுமா என்ன? இந்த புத்தகத்தை படித்த பின் உங்களின் அரசியல் பற்றிய பார்வையே மாறிப்போகும் என்பதற்கு நான் உத்திரவாதம்
உலக அரசியல் தெரிந்து கொள்ள நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். அமேசானில் புத்தகமாகவும், மின் நூலாகவும் (மூன்று மடங்கு குறைந்த விலையில்) கிடைக்கிறது

No comments:
Post a Comment