Tuesday, June 5, 2018

காலா

பொதுவாக ரஜினி படம் என்றாலே முதல் இரண்டு நாட்களுக்கு டிக்கெட் கிடைக்காது, மிக அதிக விலை வைத்து சில தியேட்டர்களில் விற்பனை செய்வார்கள். ரஜினி பட ஓபனிங்கை பொருத்தவரை அயல்நாடுகளில் கூட டிக்கெட் கிடைப்பது அரிது.

ஆனால் காலாவின் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. கோவையில் முதல்நாளுடைய ஆன்லைன் ரிசர்வேஷன் டிக்கெட்கூட இன்னமும் நிறைவடையாமல் இருக்கிறது. மற்ற இடங்களிலும் ஏறக்குறைய இதே நிலைமைதான். கபாலியை ஆக்சன் திரைப்படமாக ட்ரைலரை கொடுத்து விட்டு குமுதவல்லியை படம் முழுக்க தேடிக்கொண்டிருந்ததாலோ, அரசியல் நடவடிக்கையாலோ என்னவோ, எதற்காக ரிஸ்க், படத்தின் ரிசல்ட் தெரிந்த பின்பு பார்ப்பதாக முடிவு செய்து விட்டார்கள் போலும்.

மேலும் லைக்கா மிகுந்த பொருட்செலவு செய்து எடுத்துக்கொண்டிருக்கும் எந்திரன், பட வேலைகள் பூர்த்தியாகாமலும், ரிலீஸ் தேதி முடிவு செய்ய இயலாமலும் தவிக்கிறதாம். அந்த பெருங்கடன் தொகையின் வட்டியையாவது  கட்டலாம் என சிறு படங்களில் இன்வெஸ்ட் செய்ய ஆரம்பித்து விட்டதாம் லைக்கா.
ரஜினி எனும் காந்தத்தின் ஈர்ப்பு குறைகிறதா?