Friday, October 14, 2016

நியூசிலாந்து எனும் சொர்க்கம் பகுதி 1

ஒரு இணைய காட்சி வழிப்பயணம் இது

\கடல் பிரித்து போட்டிருக்கும் நியூசிலாந்தின் வட பகுதியில் இரு பெரும் துறைமுகங்களுடன் அமைந்துள்ள  ஆக்லாந்து வரவேற்கும். சுமார் பத்து டிகிரி குளிர் நம்மை அரவணைக்கும் அந்த நகரின் நவீனமய கட்டிடங்களும், Iconic sky towerரும் புகழ் பெற்றவைகள்.


Tasman நகரில் உள்ள kaiteriteriயில் உள்ள பீச் சிறப்பு, நான்கு புறமும் மலைகள் சூழ, நீர் சூழ குளித்து விளையாடி மகிழ ஒரு அட்டகாசமான பகுதி. புறாக்கள் நம் அருகே அமர்ந்து வேடிக்கை பார்க்கும், உள்ளே சென்று வர நவீன ரக சிறிய சுற்றுலா  கப்பல்கள் உண்டு. அதற்க்கு உள் இருக்கும் கற் பாறைகள் கூட யாரோ வடிவமைத்து வைத்தது போல் பேரழகு. கரையிலே அமர்ந்து நெடுநேரம் ரசிக்கும்படியான அமைப்புடன் இருக்கிறது        

உள்ளே கை கால்களில் செலுத்த கூடிய படகுகளும் வாடகைக்கு உண்டு, நீல கலர் சூழ மிக அழகான நீர்பர்ப்பும், இயற்கை அமைத்து வைத்த சூழ்நிலையும் மனதை ஆழ்ந்த அமைதியில் தள்ளி இவற்றை எல்லாம் வியக்க வைக்கின்றன. வில்சன் விஸ்டா என்று எழுதப்பட்ட வெண்ணிற படகு சுற்றுலா பயணிகளின் விருப்பங்களில் ஒன்று. புறா போன்ற சைஸில் வெண்ணிற நீர் பறவைகள் துறவி போல் ஆங்காங்கே அமர்ந்திருக்கின்றன.

பாதையின் இரு புறமும் கிரிக்கெட் விளையாட ஏற்ற மைதானங்கள் போல பசுமையும் மண்ணும் கலந்தே இருக்கின்றன. மலை உச்சியில் நின்று ஓடும் நீரை ரசிக்கவும் இடங்கள் உண்டு. இரு புறமும் மலைகள் சூழ்ந்து பேரழகாய் நிற்கும் இவ்விடத்தை பாருங்கள்.  
 
அதற்கு அடுத்து  Akaroa என்ற சிறிய கடல் ஒட்டிய நகரம் இருக்கிறது, இதுவும் தென் பகுதி கடற்கரையோரமாக அமைந்திருக்கிறது. சிறு சிறு வணிக அங்காடிகள், உணவகங்கள், விடுதிகள் என சுற்றுலாவிற்கான அனைத்து தகுதிகளுடனும் கண்களுக்கு விருந்தளிக்கும் மலை சிகரங்களுடனும் இருக்கிறது.  கூடவே நடந்து திரியும் புறாக்கள் கொள்ளை அழகு. தேவைபட்டால் முன் புறம் அமர்ந்து செல்வது மாதிரியான கப்பல்களை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். டால்பின்கள் நிறைய காண கிடைக்கும், அவை ஜோடி ஜோடியாக வளைந்து நெளிந்து நடனமிட்டபடி செல்வது நம்மை ஆனந்தம் கொள்ள செய்யும். ஜீல்கள் எனப்படும் நீர் பிராணிகள், சிறிய குழந்தை போல கடற்கரை மீது திணறி திணறி தாவி ஏறுகிறது.

The catlins

மிக பெரிய கோல்ப் மைதானம் போல் பறந்து விரிந்து கிடக்கிறது The catlins  பகுதிகள், ஆடு மாடு மேய்த்தல் இங்கு பிரதான தொழில். நாம் இங்கு பார்ப்பது போல வற்றி கிடைக்காமல் நல்ல செழிப்பாகவே இருக்கின்றன விலங்குகள்.  
               அலைஅலையாய் நுரைத்து பொங்கி வரும் நீரை அதன் அருகில் உள்ள மலையின் மேல் நின்று நாள் முழுவதும் காணலாம். கிவிக்கள் இரண்டு சாவகாசமாக ஓய்வெடுத்தபடி படுத்து கிடக்கின்றன. கை கால்களில் உள்ள ரக்கைகளை அசைத்து மெதுவாக புரள்வது கண்களுக்கு விருந்து, உடலை ஆட்டி ஆட்டி நடந்து வருவது புதிதாய் நடக்க துவங்கும் குழந்தையின் செய்கைகளை ஒத்தது.

Dunedin எனும் கடற்கரை பகுதியில் ஜீல்களும், கிவிக்களும் கூட்டம் கூட்டமாக கரை மேல் கிடக்கும் கருநிற கற்களில் இருப்பதை இங்கு காணலாம்.

Fox Glacier வெண்ணிற பாறைகள் சூழ, மலை தொடர்களின் நடுவே சிறு ஓடைகள் நிரம்பிய இடம், Fox frnz heli services எனப்படும் சிறு விமானங்களின் வழியே பயணம் செய்யலாம்.
   தாரை தாரையாக செல்லும் நீர் வீழ்ச்சிகளை, உயர மலைதொடர்களை, அதை சுற்றிலும் மரங்களை, பவள பாறைகளை மேகம் தழுவி கொண்டுள்ள மலை உச்சியை, தாண்டினால் முழுவதும் வெண்ணிற பனியில் மலை  சூழ்ந்த அழகிய அற்புதங்களை காணலாம்.
      உச்சியில் ஓரிடத்தில் இறக்கி படம் எடுத்து கொள்ளவும், பார்வையிடவும் அனுமதி உண்டு. பனிக்கட்டிகளை எடுத்து வீசி விளையாடலாம். மீண்டும் விமானத்தில் ஏறி பறக்கையில் பெரிய ஐஸ் கத்திகளை போல வழி நெடுகிலும் வெண்ணிற மலைகள். அடர்ந்த காடுகள்.
அங்கே அமைதியான, அதி நவீன உணவகங்கள் உண்டு, ஆச்சர்யம் என்னவெனில் கூட்ட நெரிசலோ, அவசரமோ, பதட்டமோ அம்மக்களிடம் அதிகம் காணமுடிவதில்லை...

இதை மூன்று பகுதிகளாக எழுத திட்டமிட்டுள்ளேன்... ஆகவே
......................தொடரும்